தனி வலைத்தளத்தில் சிறுகதை போட்டிக்கான கதைகள்

ஆமாம். பதிவர்களாகிய நமக்காக, நாமே நடத்தும் சிறுகதை போட்டியில் பங்குபெறும் அனைத்து சிறுகதைகளும் தனி வலைத்தளத்தில் தொகுக்கப்படுகின்றன. எனவே அனைத்து பதிவர்களும் இனி போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து சிறுகதைகளையும் ஒரே வலைத்தளத்தில் வாசிக்கலாம் :-)

பதிவர்கள் தங்கள் வலைத்தளத்தில் போட்டிக்கு அனுப்பும் சிறுகதையை பிரசுரித்துவிட்டு, மெயிலில் எங்களிடம் அதற்கான லிங்கை அனுப்புவதுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் தங்கள் இடுகைகளை சேர்க்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

http://tamil.blogkut.com/contest-uraiyadal.php

சிறுகதை போட்டியை நாம் அறிவித்தவுடன், தாமாகவே வந்து இப்படியொரு உதவியை செய்திருக்கும் "சங்கமம்" திரட்டிக்கு நன்றிகள்.
இதற்கான முயற்சியை மேற்கொண்ட பாலபாரதிக்கும், நல்லமுறையில் இந்த வலைத்தளத்தை தன் வேலை நெருக்கடிக்கு மத்தியிலும் வடிவமைத்து தந்திருக்கும் இளாவுக்கும் என்றும் அன்பு.

போட்டிக்கான முதல் சிறுகதையை நிலாரசிகனும் http://www.nilaraseeganonline.com/2009/05/blog-post_4321.html, இரண்டாவது சிறுகதையை ரத்னபீட்டர்ஸும் http://rathnapeters.blogspot.com/2009/05/blog-post_22.html அனுப்பியிருக்கிறார்கள்.

உடனடியாக இந்த நண்பர்கள், மேற்கண்ட முகவரியில் தங்கள் இடுகைகளை பதிந்துவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
மற்ற பதிவர்களும் அடுத்தடுத்து ஆர்வத்துடன் பங்கேற்பார்கள் என நம்புகிறோம்.

போட்டியில் பங்குபெறப் போகும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்.

ஆலோசனை தேவை: சொந்தமாக வலைத்தளம் இல்லாத, ஆனால், தொடர்ந்து வலைத்தளத்தை வாசித்து வரும் இரு நண்பர்கள் தாங்களும் இந்த சிறுகதை போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்கள். அதில் ஒரு நண்பர், ஒரு சிறுகதையையும் அனுப்பியிருக்கிறார்.

இதுபோன்று ஆர்வமுள்ள நண்பர்களிடம் என்ன பதில் சொல்லலாம்?

உடனடியாக சொந்த வலைத்தளத்தை ஆரம்பித்துவிட்டு போட்டியில் கலந்து கொள்ளுங்கள் என்றா?

அல்லது பரவாயில்லை, போட்டியில் நீங்களும் கலந்து கொள்ளுங்கள். 'சிதைவு' வலைத்தளத்தை அதற்காக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றா?
நண்பர்களின் கருத்துகளை அறிய ஆவலாக இருக்கிறேன். உங்கள் ஆலோசனையை வைத்துதான் அந்த நண்பர்களுக்கு பதில் மெயில் அனுப்ப வேண்டும்.

15 comments:

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் நண்பருக்கு,

உங்கள் மின்னஞ்சல் முகவரி என்னிடம் இல்லை. தந்துதவ முடியுமா?

mrishanshareef@gmail.com

பைத்தியக்காரன் said...

அன்பின் ரிஷான்,

எனது மின்னஞ்சல் முகவரி:
sivaraman71@gmail.com

தோழமையுடன்
பைத்தியக்காரன்

லக்கிலுக் said...

//அல்லது பரவாயில்லை, போட்டியில் நீங்களும் கலந்து கொள்ளுங்கள். 'சிதைவு' வலைத்தளத்தை அதற்காக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றா?//

இதுதான் உடனடி தீர்வு.

மற்றபடி அந்த நண்பர்கள் சொந்த வலைத்தளத்தை திறந்து பராமரிக்கும் அளவுக்கு நேரமிருப்பவர்களாக இருந்தால் பிரச்சினையில்லை.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இந்தப் போட்டியே வலைப்பதிவர்களுக்கானதில்லையா? (அதுவும் மூன்று இடுகைகளாவது இருக்க வேண்டுமென்று சொல்லியிருந்தீர்கள்). பிறகு எப்படி சிதைவுகள் தளத்திலோ அல்லது வேறு ஏதாவது தளத்திலோ போட முடியும்?

அவர்கள் வலைப்பதிவைத் துவங்குவதே சரியாயிருக்குமென நினைக்கிறேன்.

Sridhar Narayanan said...

போட்டிக்கும், தொடர்ந்து உற்சாகபடுத்தலுக்கும் மிக்க நன்றி சிவராமன் அவர்களே.

போட்டி மகத்தான வெற்றி பெற வாழ்த்துகள்.

இந்தப் போட்டி பதிவர்களிடையே பரவலாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் சங்கமம் குழுமத்தாருக்கும் வாழ்த்துகள்.

மேலும் சில யோசனைகள் (சங்கமம் குழுமத்தாருக்கு).

1. முகப்பு பக்கத்தில் ‘போட்டி’ என்று ஒரு இணைப்புதான் இருக்கிறது. அதுவும் ‘பேருந்து’ போட்டி பக்கத்திற்குதான் கொண்டு செல்கிறது. ‘உரையாடல்’ போட்டிக்கு முகப்பிலே தொடர்பு கொடுக்கலாமே.

2. உங்களது பழைய ‘கல்லூரி’ போட்டி பற்றிய பக்கத்தையும் காணவில்லை. பழைய போட்டிகளையும் ‘பெட்டகத்தில்’ சேர்த்து முகப்பிலிருந்து தொடர்பு கொடுத்தால் நன்றாக இருக்கும்.

3. போட்டி இடுகைகளைத் தவிர போட்டிக்களுக்கான அறிவிப்புகள் வெளியிட்ட இடுகைகளின் முகவரியையும் குறிப்பிடுவது நல்லது. உதாரணமாக ‘இந்தப் போட்டிப் பற்றி வேறு யோசனைகள் இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்’ என்று சிவராமன் குறிப்பிட்டிருந்தார். அதனை அப்படியே ‘சங்கமம்’ தளத்தில் வெளியிட்டிருக்கிறீர்கள். அங்கே வாசிக்கும் வாசகர்கள் எங்கே பின்னூட்டத்தில் யோசனைகளை தெரிவிக்க முடியும்? சிவராமனின் இடுகை உரலையும் இட்டிருந்தால் வாசகர்கள் இந்த தளத்திற்கு வந்து கருத்து பரிமாறிக் கொள்ள வசதியாக இருக்கும் இல்லையா?

4. இந்தப் போட்டிகள் பற்றி யாரேனும் பதிவிட்டிருந்தால் (உதா: பாஸ்டன் பாலா ‘கல்லூரி’ போட்டிப் பற்றி போட்டிருந்த பதிவு) அதனையும் உங்கள் தளத்தில் இணைக்கலாம். இது போட்டி பற்றிய அதிக ஆர்வத்தை பதிவர்களிடையே உருவாக்கும்.

வேறு யோசனை இருப்பின் பின்னர் தெரிவிக்கிறேன். யோசனை சொல்வது எளிதான வேலைதானே :)

Nagendra Bharathi said...

very good.
Whenever you find time, please have a look at my blog http://www.bharathinagendra.blogspot.com and offer your comments there. Thanks

ஆதிமூலகிருஷ்ணன் said...

ரூல்னா ரூல்தான், இவர்களை நீங்கள் அனுமதித்தால் இன்னும் இது போல நூறு பேர் வந்தால் என்ன செய்வீர்கள்? அப்புறம் 'வலைப்பதிவர்களுக்கான' என்ற சொல் வலுவிழ‌ந்துவிடும். ஆகவே அவர்கள் வலைப்பூ துவங்கி 3 பதிவுகளும் இடுவதுதான் நம் சிரமத்தை தெரிந்துகொள்ள‌ உதவும். எப்பிடி கொலைவெறி.? (ஏற்கனவே பயந்து போயிருக்கேன், இதுல இன்னும் போட்டியை வலுக்கவிடுவோமா? எப்பூடி.?)

கார்க்கி said...

ஆதி நகைச்சுவையாக சொன்னாலும், நானே இன்னொரு பெயரில் வலை ஆரம்பித்து இன்னொரு கதை எழுதினால் என் வெற்றி வாய்ப்பு அதிகம் ஆகுமல்லாவா?

அப்படி அது வெற்றிப் பெற்றால் என் நண்பனை விட்டு பரிசு வாங்கிக் கொள்ள போகிறேன்..

அவர்களை அடுத்தப் போட்டி வரை காத்திருக்க சொல்வதே சரியென நினைக்கிரேன்

இரா. வசந்த குமார். said...

அன்பு பைத்தியக்காரன்...

வலைப்பதிவு இல்லாதவர்களை வலைப்பதிவு துவங்கி எழுதச் சொல்லுங்கள். பதிவு ஒன்றைத் துவங்க ஐந்து நிமிடங்கள் கூட ஆகாது. மூன்று பதிவுகள் கட்டுப்பாட்டை வேண்டுமானால் புதியவர்களுக்காக இலகுவாக்கலாம். மற்றபடிக்கு இப்படி கொஞ்சம் பேரை வலையுலகிற்கு இழுத்து வந்த புண்ணியமாவது (புண்ணியம் பற்றி போர்ஹேவும், மாக்ஸிமும் என்ன சொல்லியிருக்கிறார்களோ..? இயற்கையே..!) கிடைக்குமே..!

நன்றி.

சிறுகதைப் போட்டியாளர்களுக்கு ஓர் உதவி!

ILA said...

ஆதி, நீங்க சொல்ற்து சரியானதுதான்.. புதுசா வர்றவங்களை வரவேற்போம். அதனால ஒரு பதிவு ஆரம்பிக்கட்டும். 3 பதிவு ஒரு மேட்டரா? 3 பதிவுங்கிறது பெரிய விசயமில்லீங்க. ஆனாலும் புதுப் பதிவர்களை கண்டிப்பா ஊக்குவிக்கனும். அவுங்களும் ஆரம்பிக்கட்டும். இத்தோட நிறுத்தமாட்டங்க தானே..

வெங்கிராஜா said...

இன்னொரு விசயம்... தலைக்கு ஒரு கதை என்று சொல்லியிருந்தீர்கள், இல்லையா? அங்கு போய்ப் பாருங்கள். அதற்கும் ஆவன செய்யுமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.

இரா. வசந்த குமார். said...

சிறுகதைப் போட்டியாளர்களுக்கு ஓர் உதவி!.2.

வெட்டிப்பயல் said...

//வெங்கிராஜா said...
இன்னொரு விசயம்... தலைக்கு ஒரு கதை என்று சொல்லியிருந்தீர்கள், இல்லையா? அங்கு போய்ப் பாருங்கள். அதற்கும் ஆவன செய்யுமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.//

தலைக்கு ஒரு கதை இல்லை. வலைப்பதிவுக்கு ஒரு கதை :)

இரா. வசந்த குமார். said...

புதிய எழுத்தாளர்களுக்கு 11 யோசனைகள்.

annaianban said...

கடைசி நாளில்(30.6.2009)இரவு 11 மணிக்கு மேல் ப்ளாக் ஆரம்பித்து எழுதியதால் உங்கள் ஈமெயில் ஐடியிலும், உங்கள் மே 15 பதிவில் மட்டும் அன்று என் கதையை பதிவு செய்த நான் இந்த பதிவினை இன்று தான் பார்த்தேன். இதில் கூறியபடிhttp://tamil.blogkut.com/contest-uraiyadal.phpல் நான் பதியவில்லை. என் கதையையும் பரிசீலிப்பீர்கள் அல்லவா? என் கதை தெய்வத்தின் குரல் இங்கே ஒலிக்கிறது

http://muthalmuyarchi.blogspot.com

அன்புடன்
அன்னை அன்பன்