சிறுகதைப் போட்டி முடிவுகள்

'உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பின்' சார்பாக அறிவிக்கப்பட்டிருந்த சிறுகதைப் போட்டிக்கு 250 சிறுகதைகள் வந்திருந்தன. ஆச்சர்யம், பிரமிப்பு, அதிசயம், உற்சாகம், நெகிழ்ச்சி என அனைவருக்கும் தெரிந்த வார்த்தைகளில் எந்தவொரு வார்த்தையை இங்கு பயன்படுத்தினாலும் அது எங்களது உணர்வை சரியாக வெளிப்படுத்துவதாக இருக்காது. அந்தளவுக்கு விவரிக்க இயலாத மனநிலையில் நாங்கள் இருந்தோம்; இருக்கிறோம். காரணம், ஒவ்வொருவரிடமும் தென்பட்ட ஆர்வம். தங்களாலும் சிறுகதைகளை எழுத முடியும் என்ற நம்பிக்கை.

இதில் பலர் முதல் முறையாக சிறுகதையை எழுதியிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தனர். இது வரவேற்க்கப்பட வேண்டிய விஷயம். சரியான வாசிப்பும், தொடர் எழுத்துப் பயிற்சியும் அவர்கள் மேற்கொண்டால், இனி வரும் காலங்களில் நல்ல சிறுகதை எழுத்தாளர்களாக மிளிர்வார்கள் என்பதற்கு அவர்கள் எழுதியுள்ள சிறுகதைகளே சாட்சி.

யதார்த்த, ஜனரஞ்சக, அறிவியல், சார்ந்தும், பரிசோதனை அடிப்படையிலும், புராண கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டும், பெரும்பாலானவர்கள் சிறுகதைகளை எழுதியிருந்தனர். இப்போதுள்ள பொருளாதார வறட்சி குடும்ப உறுப்பினர்களை எந்தளவுக்கு மாற்றுகிறது என்பதை நெகிழ்ச்சியாகவும், உள்ளத்தை உருக்கும் வண்ணமும் பலரும் பதிவு செய்திருந்தனர். ஈழப் பிரச்னையையும், தலித் பிரச்னையையும் சிலர் தொட்டிருந்தனர். புராண கதாபாத்திரங்களை வைத்தும் சிலர் கதைகளை எழுதியிருந்தனர். ஆனால், நகைச்சுவை கதைகள் குறைவாகவே வந்திருந்தன. பெரும்பான்மையான கதைகள் எதார்த்த வகை எழுத்துகளாக இருந்தன.

உண்மையில் போட்டியில் கலந்து கொண்ட அனைவருமே வெற்றி பெற்றவர்கள்தான். அனைவருமே கௌரவிக்கப்பட வேண்டியவர்கள்தான். அனைவருக்குமே தலா ரூபாய் 1,500 வழங்குவதுதான் முறை. என்றாலும் போதிய பொருளாதார வசதிகள் இல்லாததால் 20 பதிவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்கும் நிலை. இந்த தேர்ந்தெடுப்பில் நடுவர்களின் ரசனையும், சிறுகதை குறித்த அவர்களது பார்வையும் கலந்திருப்பதால், இதையே இறுதி முடிவாகவும் கொள்ள முடியாது. எனவே தேர்ந்தெடுக்கப்படாத பதிவர்கள் மனச்சோர்வடையாமல் தொடர்ந்து எழுதுவதன் மூலம் சிறுகதைப் பரப்பில் தங்கள் பங்களிப்பை அழுத்தமாகப் பதிவு செய்ய வேண்டும் என்பதே எங்கள் ஆசை. வேண்டுகோள்.

தொடக்கத்தில் இரு பிரபலமான, பதிவுலகை சாராத எழுத்தாளர்களை நடுவர்களாக நியமித்திருந்தோம். அவர்களும் ஆர்வத்துடன் ஒப்புக் கொண்டனர். ஆனால், வந்த சிறுகதைகளை ஒழுங்குப்படுத்தி வாசித்து ஆரம்பகட்ட தேர்ந்தெடுப்பை நிகழ்த்துவதற்குள் நாட்கள் நகர்ந்துவிட்டன. நடுவில் ஏற்பட்ட தனிப்பட்ட சிக்கல்கள் குறித்து முன்பே பதிவில் குறிப்பிட்டிருந்தோம்.

இந்நிலையில் நடுவர்களிடம் சிறுகதைகளை நாங்கள் தருவதாக சொல்லியிருந்த காலக்கேடு முடிந்துவிட்டது. அவர்களுக்கும் வேறு தொழில் சார்ந்த வேலைகள் வந்துவிட்டன. இந்த இக்கட்டான சூழ்நிலையில் வேறு வழியின்றி நாங்களே (பைத்தியக்காரன் - ஜ்யோவ்ராம் சுந்தர்) நடுவர்களாக இருந்துவிட்டோம்.

முந்தைய இடுகையின் பின்னூட்டத்தில் நண்பர் ராஜன் கூறியிருக்கும் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை. கிட்டத்தட்ட 37 சிறுகதைகள் பரிசுக்குரியதாக இருந்தன. இதிலிருந்து 20 சிறுகதைகளை மிகுந்த சிரமத்துக்கு இடையிலும், பலகட்ட வாக்குவாதத்துக்கு பிறகும்தான் தேர்ந்தெடுத்தோம்.

அந்தவகையில் நடுவர் குழு தேர்ந்தெடுத்த 20 சிறுகதைகள் :

(இவை தரவரிசையிலான பட்டியல் அல்ல)

1. பெண்கள் இல்லாத ஊரின் கதை - ரெஜோ வாசன் ( http://www.rejovasan.com/2009/06/30/no-land-for-women/ )
2. பிரசன்னம் - யோசிப்பவர் ( http://kathaiezuthukiren.blogspot.com/2009/06/blog-post.html )
3. அம்மாவுக்குப் புரியாது - RV ( http://koottanchoru.wordpress.com/2009/06/30/ )
4. அம்மாவின் மோதிரம் - எம் ரிஷான் ஷெரீப் ( http://rishanshareef.blogspot.com/2009/06/blog-post_19.html )
5. அப்பா வருவாரா - கவிதா ( http://kavithavinpaarvaiyil.blogspot.com/2009/06/blog-post_30.html )
6. நீர் வழிப்படுஊம் புணை - சேரல் ( http://seralathan.blogspot.com/2009/06/blog-post_29.html )
7. அவளாக இருந்திருக்கலாம் - நந்தவேரன் ( http://adtams.blog.com/2009/06/27/அவளாக-இருந்திருக்கலாம்/ )
8. மலைகள் காணாமல் போன தேவதைகள் - தமிழன் - கறுப்பி ( http://enninavinveliyilnan.blogspot.com/2009/06/blog-post_26.html )
9. வாழையடி வாழை - வெட்டிப் பயல் ( http://naanrasithavai.blogspot.com/2009/06/blog-post.html )
10. மனையியல் - இரா வசந்தகுமார் ( http://kaalapayani.blogspot.com/2009/06/blog-post.html )
11. அவள் பத்தினி ஆனாள் - ராமச்சந்திரன் உஷா ( http://nunippul.blogspot.com/2009/06/blog-post.html )
12. கிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம் - நிலா ரசிகன் ( http://nilaraseegansirukathaigal.blogspot.com/2009/06/blog-post.html )
13. காத்திருத்தல் - சரவணன்.P. ( http://tamilwritersaravanan.blogspot.com/2009/06/blog-post.html )
14. நீரும் நெருப்பும் - வெண்ணிலா ( http://vennilapakkangal.blogspot.com/2009/06/blog-post_3928.html )
15. நான் அல்லது நான் - நந்தா குமாரன் ( http://nundhaa.blogspot.com/2009/05/blog-post_25.html )
16. வழியனுப்பிய ரயில் - உமாசக்தி ( http://umashakthi.blogspot.com/2009/05/blog-post_27.html )
17. வள்ளியம்மையின் பழுப்பு கண்கள் - புபட்டியன் ( http://ppattian.blogspot.com/2009/06/blog-post_17.html )
18. மைய விலக்கு - சத்யராஜ்குமார் ( http://inru.wordpress.com/2009/06/08/twilight/ )
19. தற்செயலாகப் பறிக்கப்பட்ட ஒரு மலர் - அகநாழிகை வாசுதேவன் ( http://aganaazhigai.blogspot.com/2009/06/blog-post_03.html )
20. காதோரமாய் - ஸ்ரீதர் நாராயணன் ( http://www.sridharblogs.com/2009/06/blog-post_17.html )

போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் எங்கள் நன்றி. வெற்றி பெற்றவர்களுக்கு எங்கள் வாழ்த்துகள். இந்த இருபது நண்பர்களும் மீண்டும் ஒருமுறை எந்த பெயரில் காசோலை இருக்க வேண்டும், அதை எந்த முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்பதை எங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக தெரியப்படுத்தும் படி கேட்டுக் கொள்கிறோம். எழுதிய சிறுகதைகளுக்கான உரிமை அவரவருக்குத்தான் சொந்தம் என்றாலும், இப்போது 'கிழக்குப் பதிப்பகம்' சார்பில் தொகுப்பாக வருவதற்கு இசைவு தெரிவித்து ஒரு வார்த்தையை அதே மின்னஞ்சலில் சேர்க்கும்படியும் கேட்டுக் கொள்கிறோம்.

பதிவுலக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

முடிவுகளை அறிவித்துவிட்டோம். அனைத்து பதிவர்களும் திறந்த மனத்துடன் தங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும், உரையாடல்களையும் முன் வைத்தால் பயனுள்ளதாக இருக்கும். இதைப் பின்னூட்டமாகவும் சொல்லலாம் அல்லது தங்கள் தளத்தில் தனி இடுகையாகவும் எழுதலாம். அப்போதுதான் நாங்கள் எங்களையும் அறியாமல் செய்திருக்கும் தவறுகள் புரியும். இனிவரும் காலங்களில் அப்படியான தவறுகள் நிகழாமல் பார்த்துக் கொள்ளவும் உங்களின் இந்தப் பங்களிப்பே வழிவகுக்கும். செய்வீர்கள் என்று நம்புகிறோம்.

அடுத்த நிகழ்வு குறித்த அறிவிப்பு வரும் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 10ம் தேதி) வெளியாகும்.

தோழமையுடன்
பைத்தியக்காரன் (sivaraman71@gmail.com)
ஜ்யோவ்ராம் சுந்தர் ( jyovramsundar@gmail.com )

205 comments:

«Oldest   ‹Older   1 – 200 of 205   Newer›   Newest»
தமிழ் பிரியன் said...

Vetri petravarkalukku vaazthukkal.

குடுகுடுப்பை said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

குடுகுடுப்பை said...

250 ல் ஒருவனான எனக்கு நானே வாழ்த்திக்கிறேன்.:)

அபி அப்பா said...

வெற்றி பெற்றவர்களுக்கு என்ன் அன்பான வாழ்த்துக்கள்! நடத்திய சிவராமன், ஜ்யோவ்ராம் சுந்தருக்கும் வாழ்த்துக்கள்!

சென்ஷி said...

:))

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

Vidhoosh said...

ஆகா.. அருமையான தேர்வுகள்.
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நந்தா. காங்கிராட்ஸ்:)

--வித்யா

கும்க்கி said...

வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

PUTHUVAIPRABA said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.போட்டிக்கு வந்த கதைகளை பற்றிய நடுவர்கள் கருத்துகளை விரிவான ஒரு விமர்சன இடுகையாக வெளியிட்டால் நன்றாக இருக்குமே…

சந்தனமுல்லை said...

அனைவருக்கும் வாழ்த்துகள்! நடுவர்களுக்கும்!! :-)

ரெஜோ said...

வெற்றி பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் :-) சிவராமன், ஜ்யோவ்ராம் சுந்தர் அவர்களுக்கும் வாழ்த்துகளும் நன்றியும் :-)

ஸ்வாமி ஓம்கார் said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நடுவர்களுக்கு எனது அன்பு.

Nundhaa said...

நன்றி. வாழ்த்துகள்.

டக்ளஸ்... said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ஆ.முத்துராமலிங்கம் said...

வெற்றி பெற்றவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும் சந்தோசமும்

நிலாரசிகன் said...

வெற்றி பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் :-)

நன்றிகள் பல பைத்தியக்காரன்/சுந்தர் :)

தண்டோரா said...

கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுக்கள்..நன்றி

தராசு said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இந்தப் போட்டியை நடத்தி, கதைகளை தேர்ந்தெடுத்து, பரிசுகள் வழங்கிய சிவராமன் அண்ணாச்சி, மற்றும் குருஜிக்கு வாழ்த்துக்கள், நன்றிகள்.

கவிதா | Kavitha said...

நன்றி :) ரொம்ப சந்தோஷமாக இருக்கு..!! :)

வெற்றி பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்

நடுவர்களுக்கு என் நன்றிகள் பல..!! :))

வெட்டிப்பயல் said...

கலந்து கொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துகள்...

போட்டியை நடத்தி வலைப்பதிவர்களை ஊக்குவித்த ”உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பிற்கு” எனது நன்றிகள்!!!

ஆ.ஞானசேகரன் said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

சேரல் said...

நன்றி!

வெற்றி பெற்ற அனைவருக்கும், கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

சிவராம், ஜ்யோவ்ராம் சுந்தர் இவர்களுக்கு நன்றியும், வாழ்த்துகளும்

-ப்ரியமுடன்
சேரல்

Prakash said...

வெற்றி பெற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துகள். அந்த பதினேழு கதைகளையும் எங்கள் பார்வைக்கு வைக்க இயலுமா?

ஆதிமூலகிருஷ்ணன் said...

போட்டியாளர்களுக்கும், வெற்றியாளர்களுக்கும், மனமார்ந்த வாழ்த்துகள்.! பைத்தியக்காரனுக்கும், ஜ்யோவ்ராம்சுந்தருக்கும் நன்றிகள்.!

(என்ன பண்றது? கொஞ்சம் வயித்தெரிச்சல்தான். அதான் இப்படி டெம்பிளேட் பின்னூட்டம்.

விடுறா விடுறா சுனாபானா, அப்படியே கிரிப்போட போயிரணும். அதான் அடுத்த போட்டி வருதில்ல..)

மாசற்ற கொடி said...

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

மற்றவர்களுக்கு (என்னையும் சேர்த்து) - பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம் !

அடுத்த அறிவிப்புக்காக waiting ....

அன்புடன்
மாசற்ற கொடி

ஆதிமூலகிருஷ்ணன் said...
This post has been removed by the author.
"அகநாழிகை" said...

சிவராமன் - ஜ்யோவ்ராம் சுந்தர்,
மிகப்பெரிய பணி இது. எழுதுவதும், வாசிப்பதற்கும் நேரம் ஒதுக்கி செய்ய வேண்டியிருக்கிற இக்கால கட்டத்தில் உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது.
000
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வெற்றி பெற்றவர்கள் மட்டுமின்றி எல்லோருக்குமே இது மேலும் எழுத ஒரு உந்து சக்தியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
000
எனக்கு நண்பர்களாயிருக்கும் சேரல், நந்தா, உமாஷக்தி ஆகியோர் வெற்றி பெற்றதில் கூடுதலாய் மகிழ்கிறேன்.
000
முயற்சி தொடர நல்வாழ்த்துக்கள்.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

nchokkan said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்திகள் :)

- என். சொக்கன்,
பெங்களூர்.

nchokkan said...

எழுத்துப்பிழைக்கு மன்னிக்க, அது வாழ்த்திகள் இல்லை, வாழ்த்துகள் :)

- என். சொக்கன்,
பெங்களூர்.

நாடோடி இலக்கியன் said...

வெற்றி பெற்றவர்கள்,கலந்து கொண்ட போட்டியாளர்கள், இப்போட்டியை சிறப்பான முறையில் நடத்தி முடித்த பைத்தியக்காரன் மற்றும் ஜ்யோவ்ராம் சுந்தர் ஆகியோருக்கு நன்றி கலந்த வாழ்த்துகளும்,பாராட்டுகளும்.

Cable Sankar said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Kripa said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

மேலும் தாங்கள்,
"கிட்டத்தட்ட 37 சிறுகதைகள் பரிசுக்குரியதாக இருந்தன."
என்று குறிப்பிட்டு இருந்தீர்கள்...

தாங்கள் இந்த 20 சிறுகதைகளோடு சேர்த்து ஏன் மீதமுள்ள 17 கதைகளையும் புத்தகமாக பிரசுகிக்கக் கூடாது... இது என் தாழ்மையான கருத்து....

ஆடுமாடு said...

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

நட்புடன் ஜமால் said...

அனைவருக்கும் வாழ்த்துகள்.

☀நான் ஆதவன்☀ said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

குசும்பன் said...

வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஹிஹி.. ஸாரிங்க.. ஒரு ஆர்வத்துல லிஸ்ட மட்டும் பார்த்துட்டு பதிவை படிக்காமலே சிந்தனைக்கு உள்ளாகி அப்படியே முந்தைய பின்னூட்டமும் போட்டுட்டேன்.

Vijayashankar said...

புத்தகமாக வெளி கொணர முடிவு எடுத்தவுடனே எனக்கு தெரியும், இப்படி பதிவிக்கும் நோக்கில் தேர்வு நடக்கும் என்று!

எதற்கு நீங்கள் அவர்களிடம் நேரடியாக கேட்டு கதை பெற்று புத்தகம் வெளியிட்டிருக்கலாம். :-)

ஒரு மயிலேஜ் கிடைத்துள்ளது, புத்தகம் விற்க! போட்டியில் வெற்றி பெற்ற கதைகள் என்றால், வாங்கும் கூட்டம் கொஞ்சம் அதிகம் தான்...

என்னை பொறுத்த வரை வேறு இருபது கதைகள் நான் தேர்ந்தெடுத்து உள்ளேன். அவற்றை பற்றி ஒரு பதிவு, நேரம் கிடைக்கும் போது போடுகிறேன்.

நான் அதிகம் படிக்கும் ஆங்கில எழுத்தாளர்களின் தாக்கமும், எனது சிறுகதை ஆசான் சுஜாதாவின் நடையும் எதிர்பார்த்து இருக்கலாம்!

ஒவ்வொருவரின் ரசனை வித்தியாசமானது!

வெண்பூ said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்... தனித்தனியா சொல்லியாச்சி, இருந்தாலும் இங்க ஒருதடவை வாழ்த்துகள்..

250 கதைகளை எழுத வைத்து அத்தனையையும் படித்து தெரிவு செய்த சுந்தர்ஜிக்கும் பைத்தியக்காரனுக்கும் நன்றிகள் பல..

எல்லா கதைகள் பற்றி விமர்சனம் கடினம், குறைந்தது வெற்றி பெற்ற கதைகள் குறித்த விமர்சனங்கள் நான்கு நான்கு வரிகளில் எழுதலாமே..

பாலகுமார் said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் !

Sridhar Narayanan said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். போட்டி நடத்தியவர்களுக்கும், உதவியவர்களுக்கும், மெருகேற்றியவர்களுக்கும் நன்றிகள் பல.

நிறைய மெனகெட்டிருக்கிறீர்கள் என்று தெரிகிறது. அத்தனை கதைகளையும் படித்து தேர்ந்தெடுப்பது என்பது சாதாரண வேலையில்லை. உங்களுடைய வேலைப்பளு அதிகரிக்காமல் இம்மாதிரியான ஒரு சிறுகதை தொகுப்பை இணையத்திலிருந்து அடிக்கடி கொண்டு வர முடிந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

Bee'morgan said...

வாழ்த்துகள் தோழர்களே.. :)

வெற்றி பெற்றோருக்கும், போட்டியை சிறப்பாக நடத்தி முடித்த பைதியகரனுக்கும் ஜ்யோவ்ராம் சுந்தருக்கும் .. :) :)

///காலக்கேடு // திருத்தி விடவும்..

குடந்தை அன்புமணி said...

சிறுகதைப் போட்டியில் வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். சிரமேற்கொண்டு நடாத்திய தங்கள் குழுவிற்கும் நன்றியும், வாழ்த்துகளும்.

Giri said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.பலரை முதல் முறையாக எழுத வைத்தது பெரிய சாதனையே.

இமாலய முயற்சி. நன்றிகள் பல.

Raju said...

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!

பரிசு ஏன், எப்படி, எதுக்குன்னு ஒரு விவரம் இல்லே?

எனக்கு பரிசு இல்லே? நிஜமாவே அழுகை வருது! முதல் முறை கதை எழுதினேன். அந்த முப்பத்தி ஏழில் இருக்கா?

( ஒரு கிண்டல் - என்ன வெற்றி பெற்ற பாதி பேர், நடுவர்களின் நண்பர்களா? சில பேர் ஏற்கனவே பதிவுலகில் பிரபலம் வேறே... என் கதையை பப்ளிஷ் பண்ணுங்க ப்ளீஸ்! )

கோபிநாத் said...

முதலில் இப்படி ஒரு போட்டியை நடத்தி பல பதிவர்களின் திறமை வெளிப்படுத்திய உங்கள் இருவருக்கும் என்னோட மனமார்ந்த நன்றிகள்...வாழ்த்துக்கள் ;)

போட்டியில் வெற்றி பெற்ற அந்த 20 நண்பர்களுக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)

போட்டியில் பங்கு கொண்ட மற்ற அனைத்து நண்பர்களும் அருமையான கதைகளை எழுதியிருந்தார்கள்...அவர்களின் மூலமாகவும் பல கதைகள் கிடைத்தது..அதனால் அவர்களுக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)

என் மனதில் தோன்றிய ஒன்று போட்டிய நடத்திய இரண்டு தலைகளுக்கும் சொல்லி கொள்ள விரும்புகிறேன்.

போட்டியில் வெற்றி பட்டியலில் இருக்கும் நபர்கள் பெரும்பாலும் ஏற்கனவே பல வெற்றிகளை கண்டவர்கள் புதிய பதிவர்கள் பெரும்பாலும் இல்லை என்பது என்னோட தனிப்பட்ட கருத்து.

\\இந்த இக்கட்டான சூழ்நிலையில் வேறு வழியின்றி நாங்களே (பைத்தியக்காரன் - ஜ்யோவ்ராம் சுந்தர்) நடுவர்களாக இருந்துவிட்டோம்\\

தொடக்கம் முதல் போன பதிவு வரை நடுவர்கள் வேறுயாரேன்னு என்று நினைக்க வைத்து இப்போது வேற வழியில்லை நாங்கள் தான் என்று சொல்லியிருப்பருப்பது பல கேள்விகளை கொண்டு வரும்.

ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் உங்கள் இந்த முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுகள் & வாழ்த்துக்கள் ;)

நர்சிம் said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
மிகச் சிறந்த அங்கீகாரம் இது..இன்னும் நிறைய எழுதும் முனைப்பை ஏற்படித்திக்கொடுத்த அங்கீகாரம்.வாழ்த்துக்கள்.

சிவராமன் & குருஜி.. மிக்க மகிழ்ச்சி இந்த ஆக்கமும் அதை திறம்பட முடித்த விதமும்.இது போன்ற நிகழ்வுகளே தொடர்ந்து இயங்க வைக்கும்.மிகுந்த பணிகளுக்கிடையில் இந்த போட்டியை நடத்தி,முடித்தமைக்கு நன்றிகள்.

மாற்றுக் கருத்தே தெரிவிக்க இயலாத அற்புதமான 20 கதைகளை தெரிந்தெடுத்த திறமைக்கு தலைவணங்குகிறேன்.

Vinitha said...

வெற்றி பெற்ற அனைவருக்கும், இந்த போட்டியில் கலந்துகொண்ட மற்றவர்களுக்கும் ( மறந்துடுவாங்களே! ) வாழ்த்துக்கள். :-)

குறைந்த பட்சம் முதல் முறையாக எழுதியவர்களுக்கு ( என்னை மாதிரி ) ஒரு ஈ புக்காவது பப்ளிஷ் பண்ணுங்க!

ஏன் அத்தனை கதைகளையும், ஒரு ஈ புக்கா போடக்கூடாது?

கம்ப்யுட்டர் காலங்க இது!

சிவராமன், ஜ்யோவ்ராம் சுந்தருக்கும் வாழ்த்துக்கள்!

சரி ஒரு பிரபல எழுத்தாளர் கூட நடுவரா கிடைக்கலையா?

இராம்/Raam said...

வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..... :)

கே.ரவிஷங்கர் said...

It is herculean task.அப்படி இப்படி என்று வலி எடுத்து கடைசியாக சுகப் பிரசவம்.ஆவதற்குள் படாத பாடு படுத்தி பைத்தியக்காரனாக்கி(ஆல்ரெடி ஒருத்தர்) விட்டாள்.பிறந்த குழந்தை எப்படி இருக்கு?

அலுவலகத்தில் அப்ரைசல் போலத்தான்.படா பேஜார் ஜாப் ஹை!
சிவராமன் சார்! நீங்க பொறுமையின் சிகரம்.சுந்தருக்கும் நன்றி.

வெற்றிப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்தக்குழந்தை எப்படி?

என் கருத்துக்கள்:

நான் படித்து சிலாகித்த இரண்டு கதைகள் தேர்வு ஆகவில்லை.
வருத்தம்.

1.நீரும் நெருப்பும் -வெண்ணிலா
2.ஊஞ்சல் -B.moorgan

எப்படி மனசு வந்தது?

அகநாழிகை/உமாஷக்தி கதைகள்:

வழக்கமான் செயற்கையான கவித்துவம்.பாசாங்குத்தனம்.கதைச்சொல்லியின் சொந்த ரசனைகள் கேரக்டர்களின் ஏற்றப்பட்டு ஓட்டாமல் தள்ளிப் போய் பைனாகுலர் வழியாகத்தான் பார்க்க வேண்டும்.
ஒரு விதப் பொய் பிரமிப்புக் காட்டி வாசகர்களை வளைக்கிறார்கள்.

நானும் படித்திருக்கிறேன் பல கதைகள் இப்படிச் செயற்கையாக அல்ல:வண்ணதாசனின் ”தனுமையில்” ஒரு பாரா:

”ஞானப்பனுக்குத் தனுவின் நினைவு மாத்திரம் ஒரு நீர்ப்பூவைப் போல அலம்பி அலம்பி அவள் முகம் நிற்க,,மற்றவையெல்லாம் நீரோட்டத்தோடு விரைந்து ஓதுங்கின.டெய்சி வாத்திச்சி நதியில் மிகுந்த செம்பருத்திப் பூவாய்,....அள்ளுகிற குடத்தில் புகுந்துவிட விரவ முட்டி முட்டி விலகி.....

வெண்ணிலாவும் B.moorgan கதைக்கு நடுவில்,நகுலன்,ஆத்மாநாம்,ழாதெரிதா என்று புகுத்தியிருக்கலாம்.தப்பு செய்துவிட்டார்கள்.

நன்றி.

ராஜன் said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Ramesh said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். கலந்துக்கொண்ட சக போட்டியாளரான நண்பர்களுக்கு நன்றிகள்!

மைக்கேல் ஜேக்சன் இப்படி காலை வாருவார்னு நினைக்கலே!

முப்பத்தியேழு கதைகள் பற்றி ஒரு சிறு விவரக்குறிப்பு போடுங்க. ரூ 30,000/- எல்லோருக்கும் பங்கிடுங்க. ( அவ்வளவு தான் கிழக்கு கொடுக்குதா? ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ராயல்டி தனியா போகுமா? )

அதே லெவல்னு சொன்னனாலே! :-)

Rangan said...

ரெண்டு மூணு கதை தவிர மத்ததெல்லாம், படிக்கறதுக்கு முன்னாலே தூக்கம் வருது! எப்படீங்க படிச்சு, கிழிச்சு, சீ... தேர்ந்தெடுத்தீங்க?

சென்ஷி said...

@ ரவிசங்கர்..

//
நான் படித்து சிலாகித்த இரண்டு கதைகள் தேர்வு ஆகவில்லை.
வருத்தம்.

1.நீரும் நெருப்பும் -வெண்ணிலா//

தல நீரும் நெருப்பும் லிஸ்ட்ல இருக்குது.

@ பைத்தியக்காரன்

கதை தேர்ந்தெடுத்தல் பற்றிய விமர்சனக்குறிப்புகளை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

Sundari said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

Sumesh said...

வெற்றிக்கு வாழ்த்து! இன்னொரு போட்டி எப்போ? அப்புறம், எனக்கு பிடிச்ச கதைக்கு ஒரு சிறு பரிசு குடுக்கனும்னா என்ன செய்யணும்?

முபாரக் said...

போட்டியில் வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

உரையாடல் அமைப்பினருக்கு நன்றியும் பாராட்டுகளும்

என். உலகநாதன் said...

கடைசிவரை யார் நடுவர் என்று சொல்லாமல், முடிவு வெளியிடும்போது நீங்கள் இருவர்தான் நடுவர் என்று சொன்னதை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Thambi said...

நடுவர்களுக்கு தலை வணங்குகிறேன்!

விழா எப்போ? ட்ரீட் உண்டில்லே?

@Ramesh கிழக்கு மினிமம் அட்வான்ஸ் ரூ 50,000 தெரியுமா? கண்டிப்பா ஒவ்வொரு எழுத்தாளருக்கும் தான் காபிரயிட் படி ராயல்டி போகும்! அதை பத்தி எழுதுவாங்கன்னு நினைக்கிறேன்! உங்க கதைக்கு ஒரு பரிசு கொடுத்திருக்கலாம், சுந்தர ராமசாமி சொல்லுவார், சம கால நிகழ்வு... அது படி பார்த்தல் நீங்க மைகேல் ஜேக்சன் பற்றி மனதில் வைத்து ஒரு அறிவியல் புனைவு பண்ணியிருக்கீங்க. நல்லது...

ஈ புக் ஐடியா நல்ல தான் இருக்கு.

ஆமா ஏன் தரம் வாரியாக பிரித்து, ஒரு கேட்டகரி லிஸ்ட் போடக்கூடாது... ஈ புக ஐடி வொர்க் அவுட் ஆகும்.

//1.நீரும் நெருப்பும் -வெண்ணிலா
2.ஊஞ்சல் -B.moorgan // How did you miss it?

சென்ஷி said...

@ நடுவர்கள்..

நான் மிகவும் எதிர்பார்த்திருந்த ஒரு கதையும் தேர்வில் இல்லை :(

பினாத்தல் சுரேஷின் கால்குலேட்டர்.

கதைகள் எப்படி எழுதுவது என்றும், கதைகள் வாசிப்பிலும் நான் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய்ய உள்ளது என்றே தோன்றுகிறது!

அனுஜன்யா said...

வெற்றிக் கதைகள் எழுதிய இருபது பேருக்கும் வாழ்த்துகள்.தமிழன்-கறுப்பி, ரிஷான், அகநாழிகை, சேரல், நந்தா, வசந்த், ஸ்ரீதர், பாலாஜி (வெட்டிப்பயல்) என்று நண்பர்கள் இந்தப் பட்டியலில் இருப்பது கூடுதல் மகிழ்ச்சி.

அனுஜன்யா

யுவகிருஷ்ணா said...

பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

koottanchoru said...

நான் எட்டு வருஷங்களுக்கு முன்னால் எழுதிய கதை, நான்+என் மனைவி+இரு நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இது வரை படித்த கதை, பரிசு வென்றிருப்பது மிக சந்தோஷமாக இருக்கிறது. என் கதையை தேர்ந்தெடுத்த பைத்தியக்காரன், ஜ்யோவ்ராம் சுந்தர் இருவருக்கும் நன்றிகள் பல!

நான் எல்லா கதைகளையும் படிக்கவில்லை. படித்த சிலவற்றில் அபி அப்பா எழுதிய செவ்வா பிள்ளையாரின் பேச்சு வழக்கு மிக நன்றாக இருந்தது. ராதா எழுதிய பயணம் படித்தபோது நமக்கு இந்த மாதிரி எழுத வருமா என்ற ஏக்கம் ஏற்பட்டது. பாலபாரதி எழுதிய சுமையின் கடைசி பாரா சூப்பர் என்று தோன்றியது (என் கதையின் கடைசி பாராவும் எனக்கு சூப்பர் என்று பட்டது. :-)) விசா எழுதிய முன்பு குடியிருந்தவரின் மனைவி, சத்யராஜ்குமாரின் மைய விலக்கு இரண்டும் எனக்கு என் கதையையே நினைவுபடுத்தின. நந்தவேரன் எழுதிய அவளாக இருந்திருக்கலாம் அபாரம்! ஆனால் முடிவு மட்டும் எனக்கு செயற்கையாக தெரிந்தது.

37 கதைகள் உங்கள் கண்களில் தேறின என்று எழுதி இருந்தீர்கள். மற்ற 17 கதைகளையும் சுட்டினால், உங்களுக்கு தெரிய கதைகளில் என்ன பிடித்திருந்தது, என்ன பிடிக்கவில்லை என்று சொன்னால் உதவியாக இருக்கும் - அதுவும் இப்போதுதான் தைரியம் வந்து வெளியே கதைகளை அனுப்பும் என் போன்றவர்களுக்கு மிக உதவியாக இருக்கும்.

என்.விநாயகமுருகன் said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

koottanchoru said...

அதிஷாவின் யாக்கையை பற்றி சொல்ல மறந்துவிட்டேன். மிக நன்றாக இருந்தது. இதற்கு பரிசு கிடைக்காது எனக்கு ஆச்சரியம்தான்.

பரிசல்காரன் said...

ஒரு முயற்சி இவ்வளவு வெற்றிகரமாகா ஆனதற்கு பின்னால் உள்ள எல்லாருடைய உழைப்பிற்கும், ஆர்வத்திற்கும் தலைவணங்குகிறேன்.

பதிவுலகை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் உங்கள் பணி மேலும் சிறக்க நாங்களும் உடனிருப்போம் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன். (ஐய... ரொம்ப ஃபார்மலா இருக்கே....)

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். பங்குபெற்றவர்களுக்கு கைகுலுக்கல்கள்!

திங்கள் அறிவிப்பை வெகு ஆவலோடு எதிர்பார்க்கிறேன்!

அக்னி பார்வை said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள் ...சிரமபட்டு நடத்திய உரையாடல் இலக்கிய குழுவுக்கும் வாழ்த்துக்கள் ..சிறப்பான பணி

பரிசல்காரன் said...

BTW,

நீங்கள் தேர்வு செய்த கதைகளை ‘பார்த்தியா நான் சொன்னேன்ல இந்த கதை ஜெயிக்கும்ன்னு’ என்று யாராவது தன் நண்பர்கள் யாரிடமாவது சொல்லியிருப்பார்கள் என்பதுதான் உங்கள் தேர்வின் சிறப்பு.

நான் நான்கு கதைகளை அப்படிச் சொல்லியிருக்கிறேன்!

திகழ்மிளிர் said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

பி.ஏ.ஷேக் தாவூத் said...

போட்டியில் கலந்து கொண்ட மற்றும் வெற்றி பெற்ற அனைவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களின் வரிசையில் என்னுடைய நண்பன் ரிஷானும் இருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

என் பக்கம் said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

வெற்றி பெற்றவர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்! பொறுப்புடன் போட்டியை நடத்தியவர்களுக்கு ஸ்பெஷல் நன்றிகள்!

வண்ணத்துபூச்சியார் said...

வெற்றி பெற்றவர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்!


நண்பர்கள் நிலா, உமா, வாசுவிற்கு கிடைத்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

சிவராமன், ஜ்யோவ்ராம் சுந்தருக்கும் வாழ்த்துக்கள். Great Job.. Excellent. Keep it up.

பத்ரிக்கும் நன்றிகள்...

எம்.ரிஷான் ஷெரீப் said...

போட்டியை நடத்தியவர்களுக்கும், வாழ்த்துச் சொன்ன அனைத்து நண்பர்களுக்கும், இன்னும் கலந்து சிறப்பித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி !

சக வெற்றியாளர்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள் !

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

வெங்கிராஜா said...

அனைவருக்கும் வாழ்த்துகள்.
பைத்தியக்காரன், சிவராமன்.. உங்கள் மீது தனி மதிப்பு வந்துள்ளது. நிச்சயம் இது இமாலயப் பணி தான். ஈ-புத்தகம் யோசனை நன்றாக இருக்கிறது, செயல்படுத்த பார்க்கலாம்.
நண்பர்கள் பலர் வெற்றி பெற்றிருப்பது சந்தோஷத்தைத் தருகிறது.
37 கதைகள் சமாச்சாரம் மண்டையைக் குடைகிறது. அந்த பட்டியலையும் போட்டால் நன்றாக இருக்கும். ஆமாம், உரையாடல் அமைப்புக்கென்றே ஒரு வலைப்பதிவு தொடங்கலாமே? எதற்கு இங்கேயே பதிவது?

வெங்கிராஜா said...

மன்னிக்கவும்.. பைத்தியக்காரன், ஜ்யோவ்ராம் என்று போட்டிருக்க வேண்டும்.

உமாஷக்தி said...

வெற்றி பெற்ற நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Great Task - சிவராமன் மற்றும் சுந்தர்.மிக்க நன்றி. கிழக்கு பதிப்பகத்தில் புத்தகமாகவும் வெளியிட இருப்பது மிகவும் மகிழ்ச்சியான விதயம்.

கே.ரவிஷங்கர் தேர்ந்த விமர்சகர். அடுத்த முறை நடுவர் குழுவில் அவரை include பண்ணுங்கள் சிவராம். ரசனைகள் எழுத்தின் சாரம், வாசிப்பானுபவம் தருவதே எழுத்தின் வெற்றி என்பது அவருக்கு தெரிந்திருக்கவில்லை என்பது வருத்தம்தான்.//வெண்ணிலாவும் B.moorgan கதைக்கு நடுவில்,நகுலன்,ஆத்மாநாம்,ழாதெரிதா என்று புகுத்தியிருக்கலாம்.தப்பு செய்துவிட்டார்கள்.// வெண்ணிலாவின் கதை மிகவும் அருமையானது. B.moorgan என்னுடைய நண்பர். தேவையில்லாத உங்கள் சொந்த கருத்தியல்களால் நண்பர்களிடைய புகைச்சலை உருவாக்குவது நன்றாக இல்லை ரவி. உங்கள் விமர்சனம் வரவேற்கத்தக்கதே ஆனால் உள் அரசியல்களிலிருந்து விலகி இருப்பதையே விரும்புவேன்.

வாழ்த்துக்கள் சொன்ன அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

கையேடு said...

வெற்றி பெற்ற சகபதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

வாசித்து தேர்வு செய்த உங்களிருவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்..

அடுத்த அறிவிப்பு என்னவாயிருக்கும் என்று ஆவாலயுள்ளது.. :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ரவிஷங்கர் & தம்பி, வெண்ணிலாவின் கதை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. உங்களுடைய மற்ற விமர்சனங்களையும் தொகுத்து ஒரு பதிவாக இடும்படி கேட்டுக் கொள்கிறேன் - பதில் எழுதச் சுலபமாயிருக்கும். அதற்காக ரூ 50,000 என்பதெல்லாம் ரொம்ப ஓவர் :)

இந்தப் போட்டிக்கும் கிழக்கிற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. எங்கள் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் புத்தகமாக வெளியிட முன்வந்த பத்ரிக்கு நன்றிகளைத்தான் சொல்ல வேண்டும் - வியாபார ரீதியில் இது அவருக்கு நிஷ்டமே ஏற்படுத்தும் என்பது எங்களுக்குத் தெரியும் :(

R.Gopi said...

வெற்றி பெற்ற அனைவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.....

ரத்னாபீட்டர்ஸ் [rathnapeters] said...
This post has been removed by the author.
துபாய் ராஜா said...

போட்டியில் பங்கு பெற்றோர் மற்றும் வெற்றிபெற்றோருக்கும் வாழ்த்துக்கள்.

திரு.பைத்தியக்காரன் சிவராம் மற்றும் திரு.ஜ்யோவ்ராம் சுந்தருக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்.

ரத்னாபீட்டர்ஸ் [rathnapeters] said...

கதை போட்டியெல்லாம் நமக்கு வேண்டாம், ஏதோ வந்தோமா தெரிந்ததை எழுதிச் சென்றோமா என்று இருந்திடு என்று என் மனசு என்கிட்ட "ஓ"ன்னு அழுது அடம் பிடிச்சுது நான் தான் கேட்கல. இப்போ போட்டி முடிவை பார்த்துட்டு என் மனசு என்னை பார்த்து கேட்குது "அப்பவே நான் சொன்னேனில்ல இதெல்லாம் நமக்குத் தேவை இல்லன்னு" , முதல்லையே என்னோட மனசு சொன்னத கேட்டிருக்கணும். இப்படித்தான் எப்போவுமே நான் என்னோட மனசு சொல்லறத கேட்கிறதே கிடையாது, இனிமேலாவது திருந்தணும்.

புதியவர்களுக்கு இடம் கொடுக்காமல் பழையவர்களையே தேர்ந்தெடுத்திருப்பது எழுபவர்களை ஊக்குவிக்காது, என்பதை நடுவர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன், இதனால் பல புதியவர்கள் கதை எழுதுவதை விட்டுவிடுகிரார்களோ இல்லையோ போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆர்வம் இல்லாமல் போகும் எனபது நிச்சயம்.

சென்ஷி said...

@ உமாஷக்தி...

// ரசனைகள் எழுத்தின் சாரம், வாசிப்பானுபவம் தருவதே எழுத்தின் வெற்றி என்பது அவருக்கு தெரிந்திருக்கவில்லை என்பது வருத்தம்தான்.//

சத்தியமா பின்னூட்டத்துல நீங்க என்ன எழுதியிருக்கீங்கன்னு எனக்கு சுத்தமா புரியலைங்க உமா ஷக்தி. தெளிவுபடுத்த முடியுமா?

உங்க கதை எனக்கு பிடிச்சுருந்தது. வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

செந்தழல் ரவி said...

வெற்றிபெற்ற மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !!!!!

சென்ஷி said...

//சென்ஷி said...
@ நடுவர்கள்..

நான் மிகவும் எதிர்பார்த்திருந்த ஒரு கதையும் தேர்வில் இல்லை //

மேலே இருக்குற வாக்கிய அமைப்பு தப்பா புரிஞ்சுக்குற அபாயம் இருக்குறதால,

நான் மிகவும் எதிர்பார்த்திருந்த பினாத்தல் சுரேஷின் கதையும் தேர்வில் இல்லை என்று திருத்தி வாசித்துக்கொள்ளவும்.

-சென்ஷி

அபி அப்பா said...

நர்சிம், ரசனைக்காரி கைதைகளை ரொம்ப எதிர்பார்த்தேன். கடைசிகட்ட தேர்வுக்கு முன்னர் 37 கதையாக இருந்தது என்று சொலியிருக்கின்றீர்கள். அந்த மீதி 17 கதையையும் சொல்லிவிட்டால் இன்னும் 17 பேர் சந்தோஷப்படுவ்வாங்க தானே! இதை ஏன் பரிசீஇலிக்க கூடாது??

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

@இனியவன், தவிர்க்க முடியாத சூழலில் நாங்களே கதையைத் தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட நேர்ந்தது. (எங்களுக்கும் கிட்டத்தட்ட 20 வருடகால சிறுகதை வாசிப்பு அனுபவம் இருந்ததால் இதைச் செய்தோம்).

@ vijayshankar, நீங்கள் செய்திருப்பது மிக மோசமான கற்பனை - அவதூறு என்றுகூடச் சொல்லிவிடலாம்.

@ ராஜூ - பாதி இல்லை, பலரை எங்களுக்கு யார் என்றே தெரியாது.

வடகரை வேலன் said...

வெற்றி பெற்றவர்கள்,கலந்து கொண்ட போட்டியாளர்கள், இப்போட்டியை சிறப்பான முறையில் நடத்தி முடித்த பைத்தியக்காரன் மற்றும் ஜ்யோவ்ராம் சுந்தர் ஆகியோருக்கு நன்றி கலந்த வாழ்த்துகளும்,பாராட்டுகளும்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

பைத்தியக்காரான், மீதி இருக்கும் 17 கதைகளையும் சொல்லலாம் எனப் பலர் சொல்கிறார்கள் - செய்யலாமா என்பதைச் சொல்லவும்.

இன்னுமொன்று - சாதாரணமாக யாரும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான விளக்கங்களைச் சொல்வதில்லையென்றாலும், நாம் இயங்குவது வலையில் என்பதால் சொல்லலாம் என்று தோன்றுகிறது.

இது குறித்து பைத்தியக்காரன் மட்டுமல்ல - மற்றவர்களும் தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.

இரவுப்பறவை said...

பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
இந்த முயற்சியை மேற்கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்...

ஜெட்லி said...

வெற்றி பெற்றவர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

sathyarajkumar said...

மைய விலக்கு சிறுகதையை தேர்வு செய்தமைக்கு எனது நன்றிகள் பல. மற்ற பத்தொன்பது பேருக்கும் வாழ்த்துக்கள். போட்டி நடத்திய பைத்தியக்காரன் மற்றும் சுந்தருக்கும், கிழக்கு பத்ரிக்கும் மனமார்ந்த நன்றி.

//இதனால் பல புதியவர்கள் கதை எழுதுவதை விட்டுவிடுகிரார்களோ இல்லையோ போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆர்வம் இல்லாமல் போகும் எனபது நிச்சயம்.// என்று சொன்ன ரத்னா அவர்களுக்கு ஒரு வார்த்தை. ஒரு போட்டியில் பெற்ற தோல்வியே தொடர்ந்து பல போட்டிகளில் பங்கெடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தை எனக்கு ஏற்படுத்தியது என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

- சத்யராஜ்குமார்

சரவணகுமரன் said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் :-)

வினவு said...

தன் கதை வெற்றிபெறுவதும்,அச்சில் வருவதும் ஒரு எழுத்தாளனுக்கு அதுவும் வளரும் எழுத்தாளனுக்கு உற்சாகம் அளிக்கும் விசயமே. தமது வலிகளை இலக்கியமாக்கத் தெரியாத,மக்களின் வாழ்க்கை போராட்டத் தருணங்களைக் கைப்பற்றவும் இலக்கியமாக்கவும் இந்த இந்த உற்சாகம் பயன்படட்டும்.
போட்டியில் கலந்து கொண்ட, வெற்றிபெற்ற நண்பர்களுக்கு வினவின் வாழ்த்துக்கள்.

நட்புடன்
வினவு

அதிஷா said...

அடப்போங்கையா நீங்களும் உங்க போட்டியும்!

கார்க்கி said...

congrats winners..

thanks sivanna and sundarji

T.V.Radhakrishnan said...

வெற்றி பெற்றவர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்! நடத்திய சிவராமன், ஜ்யோவ்ராம் சுந்தருக்கும் வாழ்த்துக்கள்!

PPattian : புபட்டியன் said...

அன்புமிகு தமிழ் வலையுலகின் சான்றோர்களே,


- எனக்கு பைத்தியக்காரனையோ, ஜ்யோவ்ராமையோ பர்சனலாகத் தெரியாது. அவர்களை இதுவரை பார்த்தது கூட இல்லை.

- பைத்தியக்காரனின் பதிவுகளில் நான் போடும் இரண்டாவது பின்னூட்டம் இது (முதல் பின்னூட்டம் எனது கதையை போட்டிக்காக இணைத்தது)

- ஜ்யோவின் காமக்கதைகள் தவிர்த்து வேறு எதற்கும் நான் பின்னூட்டியதாக ஞாபகம் இல்லை.

- ஜ்யோவோ, பைத்தியக்காரனோ இதுவரை என் எந்த ஒரு பதிவிலும் (Not even a single) பின்னூட்டியதே கிடையாது.

- 2007 ல் இருந்து தமிழில் வலையில் நடக்கும் பல போட்டிகளில் கலந்து கொண்டும் எனக்கு முதல் முதலாக கிடைக்கும் பரிசு / அங்கீகாரம் இதுவே..



- பரிசு கிடைத்தபின்னும் இங்கு பின்னூட்டியிருக்கும் பலரும் எனது கதையை படித்திருக்க மாட்டார்கள் என்பது நிச்சயம். அவர்களெல்லாம் எதையாவது சொல்லிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது போல பின்னூட்டியுள்ளது கவலையை மட்டுமே அளிக்கிறது.

இந்த நேரத்தில் பைத்தியக்காரனையும், ஜ்யோவையும் பாராட்டுவதோடு.. அவர்களின் உழைப்புக்கும், அக்கறைக்கும் மரியாதையையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும், அங்கீகாரம் பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்.

பா.ராஜாராம் said...

பெரிய காரியம் சுந்தர்,பை.காரன்.எழுதுபவர்களக்கு மிகுந்த உற்சாகம் இது.பங்கெடுத்துக்கொண்ட அணைவருக்கும்,வெற்றியாளர்கள் அனைவருக்கம் மனமார்ந்த வாழ்த்தும் அன்பும்.மீண்டும்,பைத்தியக்காரன்,சுந்தர் great job.weldone!

யுவகிருஷ்ணா said...

//- பரிசு கிடைத்தபின்னும் இங்கு பின்னூட்டியிருக்கும் பலரும் எனது கதையை படித்திருக்க மாட்டார்கள் என்பது நிச்சயம். அவர்களெல்லாம் எதையாவது சொல்லிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது போல பின்னூட்டியுள்ளது கவலையை மட்டுமே அளிக்கிறது. //

இந்தப் பின்னூட்டம் கேணைத்தனமானதும், இங்கு பின்னூட்டங்களில் வாழ்த்துகளை தெரிவித்தவர்களையும் கொச்சைப்படுத்துவதாகவும் உள்ளது.

பரிசு வாங்கிவிட்டதால் மட்டுமே உங்கள் கதையை எல்லோரும் படித்து தொலைக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. யாரும் யாரையும் எதற்காகவும் கட்டாயப்படுத்த முடியாது.

எந்தப் போட்டி நடந்தாலும் பங்கேற்பது, வென்றாலும் சரி, வெற்றிவாய்ப்பை இழந்தாலும் சரி.. வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வது என்பதை கடந்த மூன்றாண்டுகளாக கடைபிடித்து வருகிறேன். பொத்தாம்பொதுவாக இப்படி ஒரு பின்னூட்டம் போட்டால் அது என்னைப் போன்றோரையும் பாதிக்கிறது என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

coolzkarthi said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்....
பைத்தியக்காரன் மற்றும் ஜ்யோவ்ராம் அவர்களுக்கு உங்கள் பணி வியக்கவைக்கிறது....

அது சரி said...

//
இந்த இக்கட்டான சூழ்நிலையில் வேறு வழியின்றி நாங்களே (பைத்தியக்காரன் - ஜ்யோவ்ராம் சுந்தர்) நடுவர்களாக இருந்துவிட்டோம்.
//

போட்டி முடிவுகளை விட எனக்கு இது முக்கியமாக படுகிறது....இருநூறுக்கும் மேற்பட்ட கதைகளை படித்து, தரம் பிரித்து, சொன்ன நேரத்தில் முடிவுகளை அறிவித்து இருப்பது மிகப்பெரிய வேலை...உங்களின் ஆர்வமும், அர்பணிப்பும் என்னைப் போன்ற ஜல்லியடிப்பவனை மலைக்க வைக்கிறது...

மிக்க நன்றி பைத்தியக்காரன்/ஜ்யோவ்ராம் சுந்தர்...

அதே போல தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் சிறப்பு என்ன என்று ஒரு சிறு பத்தி எழுதினால் நன்றாக இருக்கும்...குறிப்பாக எந்த அடிப்படையில் வெற்றி கோட்டை தாண்டின என்று அறிய ஆவல்...வெற்றி பெறாத ஒருவனின் ஆர்வம் என்று எடுத்துக் கொள்ளுங்களேன்...

அதிஷாவின் கதை மிக நிச்சயம் தேர்வாகும் என்று எதிர்பார்த்தேன்...இல்லாதது ஆச்சரியமளிக்கிறது...

அது சரி said...

ராமச்சந்திரன் உஷாவின் "அவள் பத்தினி ஆனாள்" தவிர எந்த கதையையும் படிக்கவில்லை என்பதால் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் குறித்து எந்த விமர்சனமும் இல்லை...

"அவள் பத்தினி ஆனாள்"....எல்லாருக்கும் தெரிந்த ஒரு கதையை மாறுபட்ட கோணத்தில் பார்ப்பதால் நல்ல கதையே...

அது சரி said...

//
ஆதிமூலகிருஷ்ணன் said...
போட்டியாளர்களுக்கும், வெற்றியாளர்களுக்கும், மனமார்ந்த வாழ்த்துகள்.! பைத்தியக்காரனுக்கும், ஜ்யோவ்ராம்சுந்தருக்கும் நன்றிகள்.!

(என்ன பண்றது? கொஞ்சம் வயித்தெரிச்சல்தான். அதான் இப்படி டெம்பிளேட் பின்னூட்டம்.

விடுறா விடுறா சுனாபானா, அப்படியே கிரிப்போட போயிரணும். அதான் அடுத்த போட்டி வருதில்ல..)

August 8, 2009 9:37 AM
//

ஆதி சொல்ற மாதிரி நானும் அப்பிடியே கிரிப்போட போயிரேன்....யேய் வெலகு...வெலகு....கூட்டம் சேராத....வுட்றா சூனா பானா...நாள மறுநா சிக்காமயா போய்டும்...

:0))

அது சரி said...

//
"அகநாழிகை" said...
000
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வெற்றி பெற்றவர்கள் மட்டுமின்றி எல்லோருக்குமே இது மேலும் எழுத ஒரு உந்து சக்தியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
000

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

August 8, 2009 9:40 AM
//

அகநாழிகை ஐயா,

வெற்றி பெற்றவர்களுக்கு மிக நிச்சயமாக உந்து சக்தியா இருக்கும்...உண்மை...ஆனா தோத்துப் போனவங்களுக்கு எப்படி உந்து சக்தியா இருக்கும்?? ஒண்ணும் புரியலீங்களே??

அது சரி said...

//
Vijayashankar said...
புத்தகமாக வெளி கொணர முடிவு எடுத்தவுடனே எனக்கு தெரியும், இப்படி பதிவிக்கும் நோக்கில் தேர்வு நடக்கும் என்று!

எதற்கு நீங்கள் அவர்களிடம் நேரடியாக கேட்டு கதை பெற்று புத்தகம் வெளியிட்டிருக்கலாம். :-)

ஒரு மயிலேஜ் கிடைத்துள்ளது, புத்தகம் விற்க! போட்டியில் வெற்றி பெற்ற கதைகள் என்றால், வாங்கும் கூட்டம் கொஞ்சம் அதிகம் தான்...

என்னை பொறுத்த வரை வேறு இருபது கதைகள் நான் தேர்ந்தெடுத்து உள்ளேன். அவற்றை பற்றி ஒரு பதிவு, நேரம் கிடைக்கும் போது போடுகிறேன்.

நான் அதிகம் படிக்கும் ஆங்கில எழுத்தாளர்களின் தாக்கமும், எனது சிறுகதை ஆசான் சுஜாதாவின் நடையும் எதிர்பார்த்து இருக்கலாம்!

ஒவ்வொருவரின் ரசனை வித்தியாசமானது!

August 8, 2009 10:00 AM
//

விஜய்ஷங்கர்,

உங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் குறித்து மாற்று கருத்துக்கள் இருக்கலாம்....ஆனால், எந்த விளக்கமும் சொல்லாமல், "பதிவிக்கும் நோக்கில் தான் தேர்வு நடக்கும்" என்று குற்றம் சாட்டுவது போல் சொல்வது உங்களுக்கே நியாயமாக படுகிறதா?? எந்த நடுவர் தேர்ந்தெடுத்தாலும் தேர்வு அவர்களின் ரசனைப்படி தான் இருக்கும்....அதற்காக அவர்களின் நடுநிலையை சந்தேகப்படுவது நியாயமாகப் படவில்லை...

ஜமாலன் said...

உங்களின் பல முயற்சிகளை கவனித்து வருபவன் என்ற முறையில் உங்களின் இம்முயற்சி பெரும் பாராட்டுக்குரியது. பயந்ததுபோல் இல்லாமல் சிறப்பாக இதனை நடத்தி முடித்துவிட்டீர்கள்.

நண்பர் பைத்தியக்காரன்-சுந்தரின் முடிவு அறிவிப்பில் குறிப்பிட்டதுபோல, இது ஒரு தேர்ந்தெடுப்பு. இது மதிப்பீடு அல்ல. இதில் குறைநிறைகள் இருக்கும். அது தேர்வாளர்களின் தனிப்பட்ட அனுபவம் மற்றும் பயிற்ச்சி சார்ந்தது.

பங்குபெற்ற அனைத்து நண்பர்களும் ஊக்கம் பெற்று இன்னும் சிறப்பாக எழுத வாழ்த்துக்கள். (மன்னிக்கவும் நான் கதைகள் எதையும் படிக்கவில்லை. அதனால் வாழ்த்துடன் நிறுத்திக்கொள்கிறேன். படித்தபின் கருத்துக்கள் சொல்ல இருந்தால் அந்த தனிப்பட்ட பதிவகளில்.)

பொதுவாக போட்டிகள் என்பதும் முடிவுகள் என்பதும் நடத்தபவர்களின் தனிப்பட்ட கருத்துக்கள் சார்ந்தவை. அதனால் முடிவுகள் பற்றிய விமர்சனம் என்பதை தவிர்க்கலாம். அதேசமயம் வழக்கமான போட்டிகளில், முடிவுகள் மட்டும் அறிவிக்கப்படும். தேர்ந்தெடுத்த அடிப்படைகள் மற்றும் முறைகள் சொல்லப்படுவதில்லை. பதிவு என்பது வெளிப்படையானது என்ற வகையில் இந்த போட்டியில் கலந்துகொண்ட அத்துனைக் கதைகளையும் வாசிக்கவும் அவரவர் விருப்பிற்கு தேர்ந்தெடுக்கவும் உரிமை உண்டு. அப்படி பதிவர்கள் பலரும் செய்திருக்க்கூடும். ஆனால், போட்டியினை நடத்திய நண்பர்கள் அதனை தேர்ந்தெடுப்பதற்கு மற்றவர்களை அனுகி அது முடியாமல், அவர்களே தேர்ந்தெடுத்திருப்பது வருத்தமளிக்கக் கூடியது. காரணம் போட்டி நடத்தபவர்கள் நடுவர்களான இருப்து மரபு அல்ல. அதனால் அதையே பின்பற்ற வேண்டிய அவசியமும் இல்லைதானே. என்றாலும், அமைப்பு செய்ல்பாடுகளில் இப்படி சில நெருக்கடிகள் எற்படுவதும் தவிர்க்க முடியாததுதான். இருப்பினும், பதிவு வெளிப்படையானது என்றவகையில், தேர்ந்தெடுப்பதற்கான காரணங்களை சொல்வது மற்ற போடியாளர்களும் ஒப்பிட்டு தங்களை வளர்த்துக் கொள்ளவும், ஒப்பிட்டு புரிந்து கொள்ளவும் வழிவகுக்கும். இது ஒரு பயிற்சியாகவும், ஒரு ஜனநாயக நடைமுறையாகவும்கூட அமையும். அதனால் நண்பர் சுந்தர் சுட்டிக் காட்டியிருப்பதைப்போல... உங்கள் குழுவில் கலந்துகொண்டு வெளியிடுவது சிறப்பாக இருக்கும் என்று படுகிறது. இது ஆலோசனைதான்.

மற்றபடி உங்களது இப்பணி உண்மையில் பாராட்டக்கூடியது. இதற்கு நீங்கள் மேற்கொண்ட சிரமங்களும் உழைப்பும் அருமையானது.

ரொம்பத்தான் எழுதிட்டனோ...? )))

உங்களை வாழ்த்த எழுதத் துவங்கி வழக்கம்போல்.. எங்கெங்கோ போய்விட்டது.

நன்றி.

அன்புடன்
ஜமாலன்.

அது சரி said...

//
PPattian : புபட்டியன் said...

- பரிசு கிடைத்தபின்னும் இங்கு பின்னூட்டியிருக்கும் பலரும் எனது கதையை படித்திருக்க மாட்டார்கள் என்பது நிச்சயம். அவர்களெல்லாம் எதையாவது சொல்லிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது போல பின்னூட்டியுள்ளது கவலையை மட்டுமே அளிக்கிறது.

இந்த நேரத்தில் பைத்தியக்காரனையும், ஜ்யோவையும் பாராட்டுவதோடு.. அவர்களின் உழைப்புக்கும், அக்கறைக்கும் மரியாதையையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும், அங்கீகாரம் பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்.

August 8, 2009 4:01 ப்ம்//

என்ன சொல்ல வர்றீங்கன்னு ஒண்ணும் புரியலீங்க....

உங்களுக்கு பரிசு கிடைத்திருக்கிறது....உங்கள் கதையை நான் இன்னும் படிக்கவில்லை (பின்னர் படிப்பேன்)...ஆனால் நான் இங்கு பின்னூட்டியிருக்கிறேன்....

உங்கள் கதையை படிக்காமலேயே விமர்சனம் செய்தால் தான் தப்பு...வெறுமனே வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் என்று சொல்வதில் என்ன கவலை என்று எனக்கு புரியவில்லை....

SUMAZLA/சுமஜ்லா said...

காலத்தால் அழியாமல் காப்பாற்ற புத்தமிடுவது நல்ல முடிவு தான். அப்படியே, மிச்சம் பதினேழையும் சொல்லுங்களேன். நாங்க பரிசெல்லாம் கேட்க மாட்டோம்.

SanjaiGandhi said...

போட்டியில் பங்கெடுத்த அனைவருக்கும் வாழ்த்துகள். வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு வாழ்த்துகள். நடுவர்களுக்கு பாராட்டுகள்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ஜெயித்தவர்களை வாழ்த்துகிறேன்..

பரிசளிப்பவர்களை பாராட்டுகிறேன்..

புத்தகம் வெளியிடூபவர்களை வாழ்த்துகிறேன்..

வாழ்க வளமுடன்..

தமிழன்-கறுப்பி... said...

அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்!

உரையாடல் அமைப்பினருக்கும் நடுவர்களுக்கும் நன்றிகள்.

நிறையப்பொறுமை இருக்கிற செயல் வெறுமனே நன்றி மட்டும் போதாது...!

ஹயா ரூஹி said...

அனைவருக்கும் இனிய மாலை.
காலை 9 மணிக்கே முடிவுகள் வெளியாகி இருந்தாலும் கடிகார முள் 6 மணியைத் தொட அப்போதோ இப்போதோ என இருக்கும் வேளையில் தான் வெற்றிபெற்ற கதைளின் அறிவிப்பைக்காண்கிறேன்.

அல்ஹம்துலில்லாஹ்.
என் கதை தெரிவாகவில்லை.
இது நான் எழுதிய 5 வது கதை தான்.நண்பர் ரிஷானின் வற்புறுத்தலில் தான் இந்தச் சிறுகதையை எழுதினேன்.

கிட்டத்தட்ட எல்லா சிறுகதைகளையுமே நான் வாசித்து ரசித்து விட்டேன்.பரிசுக்குரியவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!
அற்புதமான சிறுகதைகளை எழுதி பரிசு கிடைக்காமலிருக்கும் தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்.

நான் ரசித்த சிறுகதைகளைப் பற்றி பின்னூட்டம் இடுவதற்கு ஆவலாயுள்ளேன்.

இன்ஷா அல்லாஹ்

போட்டியை நடாத்திய சிவராமன் ஐயா மற்றும் ஜ்யோவ்ராம் சுந்தர் ஐயா ஆகியோருக்கு அன்பு கலந்த நன்றிகள்.

koottanchoru said...

பைத்தியக்காரன், ஜ்யோவ்ராம் இருவருக்கும்:

கைகாசு போட்டு அடுத்தவர்களை எழுத ஊக்குவித்திருக்கிறீர்கள். நடுவர்கள் கிடைக்காமல் திண்டாடி கடைசியில் 250 கதைகளை நீங்களே படித்து தேர்வு செய்திருக்கிறீர்கள். (சுமாராக 25 கதை படிக்கவே எனக்கு தந்தின்கினத்தோம்) உங்கள் இலக்கிய ஆர்வம் அற்புதமாக இருக்கிறது. பல நன்றிகள்!

அப்புறம் இந்த format; சாதாரணமாக போட்டிகளில் என்னென்ன கதை வந்திருக்கிறது என்பது வெளியே தெரியாது. இங்கே தளத்தில் பதித்தோம்; இவை திரட்டவும் பட்டன; இது மிக அருமையான முறை என்று எனக்கு தோன்றுகிறது.

பரிசுக்கு தேர்வான சந்தோஷத்தில் நான் என் கதையை பற்றியும் படித்த வெகு சில கதைகள் பற்றியும் மட்டுமே பின்னூட்டம் இட்டேன். பரிசு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் மேலே எழுதியது மனப்பூர்வமாக சொல்லும் வார்த்தை. வாழ்த்துக்கள்!

கதை எழுதிய அநேகமானவருக்கு பரிசாக கிடைக்கும் பணம் முக்கியம் இல்லை, recognition மட்டுமே முக்கியம். போட்டி வைத்த உங்களுக்கும் எழுதுவதை ஊக்குவிப்பதே முக்கியமாக இருக்கும். அதனால் உங்கள் கண்களில் ஏறக்குறைய அதே தரம் உள்ளதாக பட்ட அந்த 17 கதைகளையும் honorable mention என்றாவது குறிப்பிடுவது எல்லாருக்கும் நல்லதுதானே! அந்த 17 எழுத்தாளர்களுக்கு உற்சாகம் அதிகரிக்கும்; உங்கள் நோக்கம் இன்னும் வெற்றி பெறும்; இந்த போட்டிக்கு வந்த கதைகளை படிக்க விரும்புவர்களுக்கும் இது ஒரு ஃபில்தர் ஆக பயன்படும். 250 கதை படிப்பது கஷ்டம், 20+17 கதை படிப்பது கொஞ்சம் சுலபம்!

அப்புறம் ரத்னா பீட்டர்ஸ் அவர்களுக்கு - சோர்வடைய வேண்டாம். பைத்தியக்காரன், ஜ்யோவ்ராம் இருவரின் ரசனை உங்கள் எழுத்தை தேர்ந்தெடுக்கவில்லை என்பது இரண்டாம் பட்சம்; நீங்கள் எழுதினீர்கள் என்பதுதான் முக்கியமான விஷயம். எட்டு வருஷமாக நான் எழுதிய கதையை என்னையும் சேர்த்து 4 பேர்தான் படித்தார்கள். அதை அனுப்ப இந்த போட்டிதான் எனக்கு ஊக்கம் தந்தது. இந்த போட்டி இல்லை என்றால் எனக்கு அதே 4 பேர் கொண்ட வாசகர் வட்டம்தான். உங்களுக்கும் போட்டி என்று ஒன்று வந்தது எழுத ஊக்குவித்திருக்கும் என்று நினைக்கிறேன். அதனால் சோர்வடையாமல் மேலே எழுதுங்கள்!

அதிஷா, நான் படித்த 20-25 கதைகளில் உங்கள் கதை எனக்கு மிக சிறப்பானதாக தோன்றியது. என் கதையை விட பெட்டர் என்றுதான் நினைக்கிறேன். போட்டி முடிவுகள் தனி மனித ரசனையை அடிப்படையாக கொண்டவை அல்லவா?

பைத்தியக்காரன், ஜ்யோவ்ராம்; தேர்ந்தெடுக்கப்படாத, புத்தகமாக வரப் போகாத கதைகள் வேறு போட்டிகளுக்கும், பத்திரிகைகளுக்கும் அனுப்பப் படலாமா?

யாத்ரா said...

அனைவருக்கும் வாழ்த்துகள்,
உரையாடல் அமைப்பிற்கும் வாழ்த்துகள்.

கோபிநாத் said...

\\- பரிசு கிடைத்தபின்னும் இங்கு பின்னூட்டியிருக்கும் பலரும் எனது கதையை படித்திருக்க மாட்டார்கள் என்பது நிச்சயம். அவர்களெல்லாம் எதையாவது சொல்லிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது போல பின்னூட்டியுள்ளது கவலையை மட்டுமே அளிக்கிறது.\\\

சார்...எதையாவது சொல்ல வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை...ஒருவர் மற்றொருவருக்கு வாழ்த்து சொல்வது தப்பா..அவரை தெரிந்துயிருக்க வேண்டும்..அவரோட கதையை படித்திருக்க வேண்டும் என்று எந்த கட்டயாமும் இல்லை.

அதுவும் இல்லமால் பதிவர்கள் தங்களோட கருத்துகளை தரளமாக சொல்லாம் என்று போட்டி நடத்தியவர்கள் சொன்னதால் தான் பலரும் தங்கள் (நானும் சேர்த்து தான்) மனதில் தோன்றிய கருத்துகளை பகிர்ந்து கொண்டார்கள்...தங்களோட கருத்தை கண்டிப்பாக கேட்டு ஆகா வேண்டும் என்று யாரும் நினைக்கவில்லை.

உங்களுக்கு தனிப்பட்ட முறையில் மனமார்ந்த வாழ்த்துக்கள் சார் ;)

SUMAZLA/சுமஜ்லா said...

அவரவர் உணர்வுகளை பின்னூட்டம் மூலமோ, பதிவுகள் மூலமோ தாராளமாக சொல்லலாம் என்று பைத்தியகாரன் அண்ணாச்சி சொல்லியிருந்ததால், என் உணர்வுகள் இங்கே: http://sumazla.blogspot.com/2009/08/blog-post_08.html

PPattian : புபட்டியன் said...

//என்ன சொல்ல வர்றீங்கன்னு ஒண்ணும் புரியலீங்க....

உங்களுக்கு பரிசு கிடைத்திருக்கிறது....உங்கள் கதையை நான் இன்னும் படிக்கவில்லை (பின்னர் படிப்பேன்)...ஆனால் நான் இங்கு பின்னூட்டியிருக்கிறேன்....

உங்கள் கதையை படிக்காமலேயே விமர்சனம் செய்தால் தான் தப்பு...வெறுமனே வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் என்று சொல்வதில் என்ன கவலை என்று எனக்கு புரியவில்லை....
//

நண்பர் அதுசரி..

இங்கு என் கதை என்று நான் கூறியது ஒரு உதாரணம் அவ்வளவே.. இதை ஏன் நான் எழுதினேன் என்றால், 250 கதைகளைப் கஷ்டப்பட்டு படித்து தேர்ந்தெடுத்த நடுவர்களை வெறும் சில கதைகளை மட்டுமே படித்து விட்டு, தான் விருப்பும் கதைகள் மட்டுமே வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்கிற ரீதியில் விமர்சிப்பது முறையாக இருக்காது என்று உணர்த்தத்தான்...

மற்றபடி நான் யாரையும் கொச்சைப்படுத்தவோ புண்படுத்தவோ இல்லை. என் கதையை படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதும் இல்லை. படுத்தவும் போவதில்லை.

வெறுமனே வாழ்த்து கூறியவர்களை நான் எதுவுமே கூறவில்லை.. அப்படி யாராவது மனது புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

Karthik said...

வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள் .. வாழ்த்துக்கள்..! :))

PPattian : புபட்டியன் said...

நண்பர் கோபிநாத்

அதுசரி அவர்களுக்கு நான் மேலே இட்டிருக்கும் பதிலை பாருங்கள்..


வெறுமனே வாழ்த்து கூறியவர்களை நான் எதுவுமே கூறவில்லை.. அப்படி யாராவது மனது புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி

வெட்டிப்பயல் said...

//பரிசு கிடைத்தபின்னும் இங்கு பின்னூட்டியிருக்கும் பலரும் எனது கதையை படித்திருக்க மாட்டார்கள் என்பது நிச்சயம். அவர்களெல்லாம் எதையாவது சொல்லிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது போல பின்னூட்டியுள்ளது கவலையை மட்டுமே அளிக்கிறது//

புபுட்டியனுடைய இந்த கருத்து தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளது என நினைக்கிறேன்.

நேத்து, வேகமா லிஸ்ட்ல என் பேரு இருக்கானு பார்த்துட்டு, கூடவே மையவிலக்கு, அவள் பத்தினி ஆனாள், மனையியல், காதோரமாய் இந்த கதைகளை பார்த்துவிட்டு பின்னூட்டம் போட்டுட்டேன். அந்த நேரம் நான் எப்பவும் வீட்ல வீடியோ சேட் செய்யற நேரம். அதனால பதிவைப் படிக்கல.

பின்னாடி பேசி முடித்துவிட்டு வந்து பதிவைப் படித்ததும் அதிர்ச்சி. முதல் காரணம் நடுவர்கள் பதிவர்களாகி போனது.

மறுபடியும் லிஸ்ட் பார்த்தேன், நான் எதிர்பார்த்திருந்த யாக்கை, பாஸ்கட் பால், மழை நாள் இரவில், கால்குலேட்டர் எல்லாம் இல்லை. சென்னைப் பதிவர்கள் ஒருவர் கூட லிஸ்ட்ல இல்லாதது ஒரு விதமான சந்தேகத்தைக் கிளப்பியது.

ஆனா அதே சமயம் இன்னொரு விஷயமும் மனதில் தோன்றியது. இது எல்லாம் எனக்கு பிடித்த கதைகள். ஆனா வெற்றி பெற்றிருக்கும் கதைகள் எல்லாம் நாம படிச்சிருக்கோமா? இல்லை. அப்படி இருக்கும் போது எனக்கு பிடித்த கதைகளை விட இந்த கதைகள் எந்த விதத்தில் குறைந்து இருக்கும் என்று எப்படி நினைக்கலாம்? இந்த கதைகள் அனைத்தையும் வாசிக்காமல் என் லிஸ்ட்ல அதெல்லாம் இருந்தது, ஆனா வெற்றி பெற்ற லிஸ்ட்ல அதெல்லாம் இல்லையே எப்படினு பின்னூட்டம் போட்டா அது நேர்மையான பின்னூட்டமா இருக்குமா என்பதே மனதில் தோன்றியது.

இங்கு இருக்கும் சில பின்னூட்டங்களும் அப்படித்தான் அவர்களுக்கு பிடித்த கதைகளை சொல்லியிருக்கிறார்கள். அந்த கதைகள் லிஸ்டில் இல்லை என்று வருத்தப்பட்டிருக்கிறார்கள். இங்கு இருக்கும் கதைகளையும் படித்துவிட்டு அப்படி வருத்தப்பட்டால் பரவாயில்லை என்று நண்பர் புபுட்டியான் நினைத்திருக்கிறார். அதில் தவறேதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

யாக்கை கதை தேர்வாகததற்கு எனக்கு நானே சொல்லிக் கொள்ளும் காரணம், கே.ரவிஷங்கரின் பின்னூட்டம். இருந்தாலும் அதை மனம் ஏற்றுக் கொள்ளவே மறுக்கிறது.

ஆனால் இவ்வளவையும் விட முக்கியமான விஷயம் அண்ணன் சிவராமனும், ஜ்யோவ்ராம் சுந்தர் அவர்களும் செய்த இந்த பணி சாதாரணமானது அல்ல. ஒரு போட்டி நடத்திப் பார்த்தால் அதன் கஷ்டம் தெரியும். நடுவர்கள் கிடைக்காமல் போனதால் மட்டுமே வேறு வழி இல்லாமல் அவர்கள் நடுவர்களாகி இருக்கிறார்கள். மேலும் அவர்களுக்கு அந்த தகுதியும், வாசிப்பனுபவமும் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அவர்களுடைய நடுநிலையையும் சந்தேகப்படுவது அவர்களை அசிங்கப்படுத்துவது போல.

அண்ணன் சிவராமன் அவர்களிடமும், சுந்தரிடமும் நான் கேட்டுக் கொள்வது (கொண்டது) ஒன்று தான். தேர்வான கதைகளைப் பற்றிய உங்கள் கருத்தும், விமர்சனமும். மேலும் அந்த 37 கதைகளிலிருந்து இந்த 20 கதைகள் எப்படி தேர்வானது என்பதன் விளக்கமும். இதை செய்யாமல் இந்த பணி முழுமை அடையாது.

நிலாரசிகன் said...

// சென்னைப் பதிவர்கள் ஒருவர் கூட லிஸ்ட்ல இல்லாதது ஒரு விதமான சந்தேகத்தைக் கிளப்பியது.

//

நான்,உமாசக்தி,யோசிப்பவர் மூவரும் சென்னை பதிவர்கள்தான் வெட்டிப்பயல்..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

வெட்டிப்பயல் & கூட்டாஞ்சோறு,

யாக்கை கதை நாங்கள் short list செய்து வைத்திருந்த கதைதான். கதை முடிந்தபிறகும் சொல்லப்பட்டதாகவும், கதையின் விவரணை நடைக்கும் உரையாடல் நடைக்கும் பாரிய வித்தியாசம் தெரிந்ததாகவும் கருதினோம்.

சென்னைப் பதிவர்கள் யாருமில்லையா... நாங்கள் அந்த மாதிரி criteria வைத்துக் கொள்ளவில்லை என்றாலும், சில சென்னைப் பதிவர்களும் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

கே.ரவிஷங்கர் said...

உமாஷக்தி,

//கே.ரவிஷங்கர் தேர்ந்த விமர்சகர். அடுத்த முறை நடுவர் குழுவில் அவரை include பண்ணுங்கள் சிவராம்//

ஆசையும் இருக்கு.ஆனா ஒரு பக்கத்துல பயமும் இருக்கு.நன்றி.

// ரசனைகள் எழுத்தின் சாரம், வாசிப்பானுபவம் தருவதே எழுத்தின் வெற்றி என்பது அவருக்கு தெரிந்திருக்கவில்லை என்பது வருத்தம்தான்//

புரியவில்லை.விளக்கவும்.

மன்னிக்கவும் உமா.உங்கள் உரையாடல் கதையும்,உயிரோடைக் கதையும் சேர்த்துப் போட்டு நான சற்று குழப்பிக்கொண்டுவிட்டேன்.

என் கமெண்ட்உயிரோடைக் கதைக்குப் பொருந்தும்.

உங்கள் (உரையாடல்)கதையில் நிறையச் சொல்ல வருகிறீர்கள்.
ஆனால் ஏதோ குறைகிறது.என் சொந்த கருத்து இது.ரொம்ப போட்டுக் குழப்பிக்கொள்ளாதீர்கள் உமா.

”காத்திருத்தலகள்” (சரவணன்)
பரிசுக் கதையின் அந்த தெப்பக்குளம் காதலர்கள் இன்னும் என் நெஞ்சில் இருக்கிறார்கள்.படித்துப் பாருங்கள்.


//B.moorgan என்னுடைய நண்பர். தேவையில்லாத உங்கள் சொந்த கருத்தியல்களால் நண்பர்களிடைய புகைச்சலை உருவாக்குவது நன்றாக இல்லை ரவி//
மேடம் என்னாச்சு உங்களுக்கு.
உங்கள் இருவரையுமே நான் பார்த்ததுக்கூடக் கிடையாது.எனக்கு வலையில்தான் அதுவும் பெயர்கள்தான் தெரியும்.அடுத்து நீங்கள் நண்பர்கள் என்பது எனக்கு எப்படி தெரியும்?மேலும் அவர் குறைகளை அங்கேயே சொல்லி இருக்கிறேன்.ஒரு முறை அவரின் புறாக்களைப் பற்றி ஒரு கதையைப் படித்துச் சிலாகித்தவன்.என் கருத்துக்களை சுதந்திரமாக சொல்லுபவன்.


நன்றி.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/நான்,உமாசக்தி,யோசிப்பவர் மூவரும் சென்னை பதிவர்கள்தான் வெட்டிப்பயல்../

அப்படியா.. நான் சேரல், அகநாழிகை வாசுதேவன் போன்றவர்களை மனதில் வைத்துச் சொன்னேன் :)

வெட்டிப்பயல் said...

//நிலாரசிகன் said...
// சென்னைப் பதிவர்கள் ஒருவர் கூட லிஸ்ட்ல இல்லாதது ஒரு விதமான சந்தேகத்தைக் கிளப்பியது.

//

நான்,உமாசக்தி,யோசிப்பவர் மூவரும் சென்னை பதிவர்கள்தான் வெட்டிப்பயல்..

//

நிலா ரசிகன்,
மன்னிக்கவும். நான் சென்னைப் பதிவர்கள்னு சொன்னது தவறு தான்... பிரபல பதிவர்கள்னு சொல்லியிருக்கணுமோ? அதுவும் சரியில்லை. அந்த குறிப்பிட்ட நண்பர்கள் குழாம்னு சொல்லியிருக்கணுமோ? தெரியல. இருந்தாலும் மனதில் தோன்றியது அது தான்.

ஆனால் அந்த எண்ணம் மறையக் காரணமாக இருந்தது நான் அனைத்துக் கதைகளையும் படிக்காததும் மேலும் நடுவர்களுடையை வாசிப்பனுபவமும் அவர்களுடைய மகத்தான இந்த பணியும் தான்.

சென்ஷி said...

//நிலா ரசிகன்,
மன்னிக்கவும். நான் சென்னைப் பதிவர்கள்னு சொன்னது தவறு தான்... பிரபல பதிவர்கள்னு சொல்லியிருக்கணுமோ? அதுவும் சரியில்லை. அந்த குறிப்பிட்ட நண்பர்கள் குழாம்னு சொல்லியிருக்கணுமோ? தெரியல. இருந்தாலும் மனதில் தோன்றியது அது தான். //

இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க வெட்டி. வெற்றி பெற்ற கதைகளையும் படிச்சுட்டு நீங்க கருத்து சொல்லியிருக்கலாமோன்னு இப்ப உங்க பின்னூட்டத்தை படிச்சா தோணுது :-(

கே.ரவிஷங்கர் said...

//ரவிஷங்கர் & தம்பி, வெண்ணிலாவின் கதை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது//

தவறுக்கு வருந்துகிறேன்.அதற்கு பதிலாக “சின்ன மனசு”( எவனோ ஒருவன்) கதையைச் சொல்லலாம்.
அருமையான கதை.இதுவும் நான சிலாகித்தக் கதை.சில உணர்ச்சிகளை அற்புதமாக வெளிபடுத்தியிருந்தார்.
பரிசு போனது வருத்தம்தான்.

//உங்களுடைய மற்ற விமர்சனங்களையும் தொகுத்து ஒரு பதிவாக இடும்படி கேட்டுக் கொள்கிறேன் - பதில் எழுதச் சுலபமாயிருக்கும்.//

இந்த 20 கதைகளின் விமர்சனமா?

அன்புடன் அருணா said...

போட்டி நடத்தியவர்களுக்கும்,வெற்றி பெற்றவர்களுக்கும்,நடுவர்களுககும் பூங்கொத்து!

PPattian : புபட்டியன் said...

யுவகிருஷ்ணா

என் பின்னூட்டத்தின் முதல் ஐந்து பாயிண்டுகளை விட்டுவிட்டு ஆறாவது பாயிண்டை மட்டும் பிடித்து தொங்கும் உங்கள் அரசியல் சாணக்கியத்தனத்தைப் பார்த்து வியக்கிறேன்.

அதுவும் எடுத்த எடுப்பில் "கேணைத்தனம்" என்றெல்லாம் சொல்லும் சாமர்த்தியம் எனக்கு சுட்டுப் போட்டாலும் வராது என்பதால்.. அப்பீட்...

மற்றபடி, வெறுமனே வாழ்த்து கூறியவர்களை நான் எதுவுமே கூறவில்லை.. அப்படி யாராவது மனது புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

வெட்டிப்பயல் said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
வெட்டிப்பயல் & கூட்டாஞ்சோறு,

யாக்கை கதை நாங்கள் short list செய்து வைத்திருந்த கதைதான். கதை முடிந்தபிறகும் சொல்லப்பட்டதாகவும், கதையின் விவரணை நடைக்கும் உரையாடல் நடைக்கும் பாரிய வித்தியாசம் தெரிந்ததாகவும் கருதினோம்.
//

இப்படி நாங்க கேட்கற ஒவ்வொரு கதைக்கா சொல்லிட்டு இருக்கறது நல்லா இருக்குமா? நீங்களே சொல்லுங்க.

நீங்கள் சொன்ன காரணத்தை நான் யோசிக்கவில்லை. மீண்டும் படித்து பார்க்க வேண்டும். ஆனால் ரவிஷங்கரின் இந்த பின்னூட்டம்

.................

//அவனது அறை நண்பன் அவன் , குமரன். கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருபவன். மென்மையானவன். பெண்மை கலந்து மெல்லியதாய் பேசுபவன். பெண்களுடன் இருப்பவன். அழகன் . அவனுக்கு குமரனை மிகப்பிடித்திருந்தது//

கதைச்சொல்லி இப்படி குமரனை விவரிக்கிறார். ஆனால் குமரன்
பேச்சு:-

//இன்னா பெர்சு திடீர்னு புதுச்சா எங்கூடலாம் சரக்கடிக்கிறேன்ற.. மத்த பசங்களோட அடிச்சாலும் எனக்கு தனிப்பந்திதான வப்ப.. இப்ப இன்னா பாசம் வயிக்குது.//''இன்னாவோ போ.. ஒன்னியும் புரில.. நீயா வாங்கித்தரேன்டற.. பெர்சு ..இன்னா ஆச்சு ஓனக்கு.. ''//.''

அதிஷா பெரிய சறுக்கல்

...............

ஆனா இது அந்த பின்னூட்டம் படிக்கும் போது தான் மனதில் பட்டது. நடுவர்கள் பின்னூட்டங்களைப் படித்திருக்க மாட்டார்கள் என்பது என் எண்ணம்.

உங்களுக்கும் அப்படி தோன்றியிருப்பதால் உங்கள் கருத்து நியாயமானதே!!!

.............

இதே போல அந்த 37 கதைகளுக்கும் கருத்து சொன்னால் இங்கே இவ்வளவு விவாதங்கள் இருக்காது.

வெட்டிப்பயல் said...

//இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க வெட்டி. வெற்றி பெற்ற கதைகளையும் படிச்சுட்டு நீங்க கருத்து சொல்லியிருக்கலாமோன்னு இப்ப உங்க பின்னூட்டத்தை படிச்சா தோணுது :-(

//

சென்ஷி,
அதுக்காக தான் கருத்து சொல்லாம இருந்தேன். இங்க நிறைய பேர் நான் நினைத்த மாதிரி நினைச்சிட்டு கருத்து சொல்லியிருக்காங்கனு புபுட்டியன் நினைக்கிறாருனு சொல்றேன்.

வெற்றி பெற்ற கதைகளைப் படித்து இனிமே கருத்து சொன்னாலும் சரியானதா இருக்காதுனு தோனுது.

எனக்குத் தெரிந்து நடுவர்கள் தேர்ந்தெடுத்த காரணம் தெரிந்தால் பிரச்சனை குறையும்.

Vijayashankar said...

திரு ஜ்யோவ்ராம் சுந்தர்,

என் முந்தைய பின்னூட்டம் அவதூறு கிடையாது, மன்னிக்கவும்! என்னுடைய ஸ்டையில் ஓபனாக இருப்பது. நான் ஒரு ரசிகன் முதலில். இருபத்தைந்து வருடங்களாக எழுதுபவன்.... ஆழ்ந்து படிப்பவன்! திரட்டிகளில் இணைக்காமல் இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம்!

தேர்வுக்கு முன் பதிவிக்க போகிறோம் என்று இருந்திருந்தால் அது வேறு! போட்டி விவரத்தில் இல்லை. அதனால் அந்த தோற்றம் என் மனதில். ஏன்? நடுவர்கள் ரசனை பொருத்து, நீங்கள் படித்த சிலரின் சிறுகதைகள், அந்த ( யாரோ பிரபலம், பதிவிக்கப்பட்ட .. ) கதை போல் உள்ளது என்று எண்ணி, அந்த எண்ணம் முடிவை மாற்றும் விதமாக இருக்கலாம் இல்லையா?

இப்பவும் ஒன்றும் குறைந்து போகவில்லை, தேர்வாகாத கதைகளில் * கதை எழுதியவர்கள் / இந்த போட்டியில் கலந்து கொண்டவர்கள் * வோட்டுகள் மூலம் சிறந்த பத்தை தேர்ந்தெடுத்து ... ( பதிமூன்று கூட நல்லது தான், அந்த முப்பத்தி ஏழுடன், மொத்தம் ஐம்பது கதைகள் ஆகும்... ) பதிப்பு செய்யலாம்! ( என் கதையை அதிலிருந்து விலக்கி விடுங்கள்! நோ ப்ராப்ளம்! )

நோக்கம் ஒன்று தான். நல்ல எழுத்து ரசிக்கப்பட வேண்டும்!

நன்றி.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/இப்படி நாங்க கேட்கற ஒவ்வொரு கதைக்கா சொல்லிட்டு இருக்கறது நல்லா இருக்குமா? நீங்களே சொல்லுங்க./

ஒன்றுக்கு மேற்பட்ட பின்னூட்டங்களில் இது கேட்கப்பட்டதால் சொன்னேன். தப்புதான் போல.

வெண்பூ said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
வெட்டிப்பயல் & கூட்டாஞ்சோறு,

யாக்கை கதை நாங்கள் short list செய்து வைத்திருந்த கதைதான். கதை முடிந்தபிறகும் சொல்லப்பட்டதாகவும், கதையின் விவரணை நடைக்கும் உரையாடல் நடைக்கும் பாரிய வித்தியாசம் தெரிந்ததாகவும் கருதினோம்.
//

சுந்தர்ஜி,

ஏன் கதை தேர்ந்தெடுக்கப்பட்டது என்று மட்டும் விளக்கமளித்தல் நலம். ஏன் இல்லை என்று சொல்வது படைப்பாளியைக் காயப்படுத்தும். வெறும் விமர்சனம் என்றால் தவறில்லை, ஆனால் இரண்டு கதைகளை ஒப்பிட்டு, இதனால்தான் இந்த கதையை தேர்வு செய்யவில்லை என்று சொல்வது சரியாகப் படவில்லை.

250 கதைகள் வந்தாலும் ஒவ்வொன்றும் யுனீக். உங்களுக்குப் பிடித்த ஒரு கதை எனக்கு பிடிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை, அதேபோல் எனக்குப் பிடித்தக் கதை உங்களுக்குப் பிடிக்க வேண்டும் என்று அவசியமும் இல்லை.

நீங்கள் நடுவராக இருப்பதால் உங்களுக்குப் பிடித்தக் கதைகளுக்கு ரெகக்னிஷன் கிடைத்துள்ளது, எனக்குப் பிடித்தக் கதைகளுக்குக் கிடைக்கவில்லை. அவ்வளவே.

அதனால் தயவு செய்து தெரிவு செய்யப்படாத கதைகள் ஏன் பரிசு பெற லாயக்கில்லை என்று எழுதி பதிவுலக நண்பர்களை நோகடிக்காதீர்கள். மன்னிக்கவும்.

வெண்பூ said...

வெட்டி சொன்னது போல் புபட்டியான் சொல்ல வந்தது தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருப்பதாகவே நினைக்கிறேன். இந்த பிரச்சினைகளை ஒரு ரெண்டு நாள் கழித்து வெச்சிக்கலாமே, வெற்றி பெற்றவர்களின் சந்தோசத்தையும், கொண்டாத்தையும் இந்த உரையாடல்கள் குலைக்கும் என்று அஞ்சுகிறேன்..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

வெண்பூ, ஒன்றுக்கு மேற்பட்ட பின்னூட்டங்களில் அதே கதையைக் குறித்துக் கேட்டதால் எங்கள் பார்வையைச் சொன்னேன் - நிச்சயமாகப் புண்படுத்தும் நோக்கமில்லை.

நான் சொல்வது தவறாகப் புரிந்து கொள்ளப்படும் அபாயமிருப்பதால், இனி, இதுகுறித்து ஒன்றும் சொல்லப் போவதில்லை.

வெண்பூ said...

//
வெட்டிப்பயல் said...
நான் சென்னைப் பதிவர்கள்னு சொன்னது தவறு தான்... பிரபல பதிவர்கள்னு சொல்லியிருக்கணுமோ? அதுவும் சரியில்லை. அந்த குறிப்பிட்ட நண்பர்கள் குழாம்னு சொல்லியிருக்கணுமோ? தெரியல. இருந்தாலும் மனதில் தோன்றியது அது தான்.
//

என்ன‌ கொடுமை வெட்டி இது??? எதோ ந‌டுவ‌ர்க‌ள் சொல்லிவெச்சி ப‌ண்ணிட்டாங்க‌ன்னு சொல்ற‌ மாதிரி இருக்குது.. எப்ப‌டி இருந்தாலும் இப்ப‌டி சில‌ரை நினைக்க‌ வெச்ச‌ அள‌வுக்கு ந‌ல்ல‌ க‌தைக‌ளை "அந்த‌ குறிப்பிட்ட‌ ந‌ண்ப‌ர்க‌ள் குழாம்" கொடுத்திருக்காங்க‌ன்ற‌து தெரியுது.. :))) அவ‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் பாராட்டுக்க‌ள்..

koottanchoru said...

ஜ்யோவ்ராம்,

யாக்கை பற்றி உங்கள் கருத்தை விளைக்கியதற்கு நன்றி! தேர்வுகள் உங்கள் ரசனையை பொறுத்தவை. அதை யாருக்கும் விளக்க வேண்டிய அவசியம் இல்லாதபோதும், விளக்கி இருக்கிறீர்கள். அதற்கு நன்றி!

வெண்பூ said...

//
ஜ்யோவ்ராம் சுந்தர் said...
வெண்பூ, ஒன்றுக்கு மேற்பட்ட பின்னூட்டங்களில் அதே கதையைக் குறித்துக் கேட்டதால் எங்கள் பார்வையைச் சொன்னேன் - நிச்சயமாகப் புண்படுத்தும் நோக்கமில்லை.
//

நன்றாகத் தெரியும் சுந்தர்ஜி... நீங்கள் இந்த போட்டிகளை நடத்துவதே எங்களை ஊக்கப்படுத்தத்தான். இது போன்ற சிறு விமர்சனங்கள் ரிசீவிங் என்ட்டில் இருந்து பார்த்தால் காயப்படுத்த வாய்ப்பிருப்பதாலேயே உரிமையுடன் சுட்டினேன். புரிதலுக்கு நன்றி...

வெட்டிப்பயல் said...

//என்ன‌ கொடுமை வெட்டி இது??? எதோ ந‌டுவ‌ர்க‌ள் சொல்லிவெச்சி ப‌ண்ணிட்டாங்க‌ன்னு சொல்ற‌ மாதிரி இருக்குது..//

வெண்பூ,
நான் தான் தெளிவா சொல்லியிருக்கேனே .

ஆனால் அந்த எண்ணம் மறையக் காரணமாக இருந்தது நான் அனைத்துக் கதைகளையும் படிக்காததும் மேலும் நடுவர்களுடையை வாசிப்பனுபவமும் அவர்களுடைய மகத்தான இந்த பணியும் தான்.

...................

மேலும் கதையில் இருக்கும் சில குறைகளை சொல்வது அவர்கள் மனதை கஷ்டப்படுத்த அல்ல. அது அவர்களை சரிப்படுத்தி கொள்ளவே உதவும்.

நான் என்னுடைய ஜெயிச்ச கதையை ஏன் தேர்ந்தெடுத்தாங்கனு தெரிந்து கொள்வதை விட தோற்ற கதைகளுக்கான விமர்சனத்தை அறியவே ஆவலாக இருப்பேன். அதுவும் அதிஷா மாதிரி வளரும் எழுத்தாளர்களுக்கு அந்த விமர்சனங்கள் பெரிதும் உதவும்.

நீங்க சொல்ற மாதிரி விமர்சனங்கள் எல்லாம் ரெண்டு நாள் கழித்து வைத்துக் கொள்ளலாம் :)

லதானந்த் said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

சங்கா said...

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். அவர்கள் மேலும் சிகரம் தொட வாழ்த்துகள். உரையாடல் அமைப்பு, பைத்தியக்காரன், மற்றும் ஜ்யோவ்ராம் சுந்தர் அவர்களுக்கு நன்றியும், வாழ்த்துகளும், நிறைந்த அன்பும்.
தேர்ந்தெடுக்காகப்படாத மற்றைய கதைகளின் எழுத்தாளர்கள் உற்சாகத்துடன் அடுத்த போட்டியில் கலந்து வெற்றி பெற வாழ்த்துகள்.

Dubukku said...

வெற்றி பெற்றவர்களுக்கும் கலந்து கொண்டவர்களுக்கும் வாழ்த்துகள்!!!

இந்த மாதிரி கைக்காசை போட்டு போட்டி நடத்துவது மிகப்ப்ப்ப்ப்ப் பெரிய விஷயம். அதவிட வந்திருந்த 250 கதைகளை வாசித்து 20வதை தேர்ந்தெடுப்பது ரொம்ப ரொம்ப சேலெஞ்சிங்கான டாஸ்க். இதை இத்தனை திறம் பட செய்ததற்காகவே பைத்தியக்காரனுக்கும் ஜ்யோவ்ராம் சுந்தருக்கும் மன்மார்ந்த வாழ்த்துகள்!!! கலக்கிட்டீங்க சார் !!!

தண்டோரா said...
This post has been removed by the author.
தண்டோரா said...
This post has been removed by the author.
ராஜராஜன் said...

வெற்றி பெற்று இருக்கும் பதிவாளர்கள் எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள். நான் வலை பக்கத்துக்கு வந்து ரொம்ப நாட்கள் ஆகிறது. இங்கு பறந்து இருக்கும் பதிவாளர்களில் முக்கிய நபர்கள் பதிவுகளை நான் தினமும் படிப்பேன். இவர்கள் தான் நன்றாக எழுதுகிறார்கள் என்ற மாயை மட்டுமே என்னிடம் இருந்தது . இன்று எனது மாயை எல்லாம் மறைந்து போய் விட்டது. இங்கு வெற்றி வாகை சுடி இருக்கும் நண்பர்களின் வலை பக்கம் எட்டி பார்த்தல் ஒவ்வொரும் தனி தன்மை கொண்டவர்களாக இருகிறார்கள் . நண்பர்களே உங்களை மனமார வாழ்த்துகிறேன் .

வெங்கிராஜா said...

இதே மாதிரி ஒரு நிலை 2006-இல் நிகழ்ந்தது. போட்டி என்று ஒரு இணைய ஃபோரமில் போட்டுவிட்டு, நடுவரை ஃபோரம் அட்மின்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டதால், முடிவுகள் இன்றுவரை வெளிவரவில்லை. அந்த வலி புரிகிறது சிவராமன் அண்ணா, ஜ்யோவ் அண்ணா. இத்தனை விமர்சனங்கள் வரும் என்று தெரிந்தபோதும், உள்ளதை உள்ளபடி சொல்லிவிட்டீர்கள். என்ன, 37 தான் பிரச்சனையே. முறைகள் பற்றி சொல்லாமல் விட்டுவிட்ட போதும், தேவையே இல்லாமல் ஒரு வரி எழுதிவிட்டதை வைத்து நிறைய பேர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பரிசு கிடைக்காமல் போன வருத்தம் இருந்தாலும், இது என்னை, எனது படைப்பை முன்னிறுத்திய ஒரு மேடையே. அதற்கு நன்றிகள்.

மாதவராஜ் said...

நல்ல முயற்சி. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Karthikeyan G said...

வாழ்த்துக்கள்... அனைவருக்கும்.

ரத்னாபீட்டர்ஸ் [rathnapeters] said...

http://rathnapeters.blogspot.com/2009/08/blog-post_978.html

மதுவதனன் மௌ. / cowboymathu said...

வெற்றி பெற்றவர்களுக்கும் பங்குபற்றியவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

உங்கள் அர்பணிப்புக்கு நன்றிகள் பைத்தியக்காரன் சக ஜ்யோவரம் சுந்தர்.

நடுவர்களை முன்னரே அறிவித்திருந்தால் நல்லாயிருந்திருக்கும்.

SUMAZLA/சுமஜ்லா said...

என் ரசனை இவ்ளோ தாங்க!http://sumazla.blogspot.com/2009/08/blog-post_8318.html என்னுடைய ஸ்டைலில், இந்த 20 கதைக்கான விமரிசனம்!

துளசி கோபால் said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.

யாகம் நடத்தியதுபோல் இருந்துருக்கு.

நடுவர்களுக்கும் நன்றி.

கிளியனூர் இஸ்மத் said...

இதில் கலந்துக் கொண்ட ...வெற்றிப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

அரவிந்தன் said...

அனைத்து பதிவர்களுக்கும் என் பணிவான வணக்கங்கள் !!! வெண்ணிலா என்ற பெயரில் நீரும் நெருப்பும் எழுதியது நான் தான். வலைப்பதிவர்களுக்கு முன் இந்த பின்னூட்டம் மூலமாக என்னை அறிமுகம் செய்து கொள்கிறேன்.
என் இயற்பெயர் அரவிந்தன். மென்பொருள் பணியாளனாக பிழைப்பு நடத்திக் கொண்டு வருகிறேன்.
வரிப்புலித் தைலம் என்ற கதையை முன்னாலேயே அரவிந்தன் என்ற என் பெயரில் எழுதி அனுப்பி விட்டேன். ஆனால் மனம் மட்டுப்படவில்லை. அதனால் தான் இந்த வெண்ணிலாவின் பெயரில் ஒழிந்து கொண்டு ஒரு பெண்ணின் பார்வையில், சொல்லப் போனால் ஒரு தாயின் பார்வையில் நீரையும் நெருப்பையும் கோர்த்தேன்.

எழுத ஆரம்பித்து சரியாக மூன்று மாதங்கள் இருக்கும். ஆனால் புத்தகங்களின் பரிச்சயம் பால வயதில் இருந்து இருக்கிறது. இந்த போட்டி என்னில் இருக்கும் எழுத்தை வெளிக்கொணர மிகவும் உதவியிருக்கிறது. அதற்கு தனி நன்றி. போட்டி விதிகளுக்காக வெண்ணிலா பக்கங்கள் என்ற புதிய வலைப்பூவை பூக்க வைத்தேன். அதை நீரையும் நெருப்பையும் ஊற்றி வளர்க்கிறேன்.
என்னை ஊக்குவித்த உடன் பணியாற்றும் அலுவலக நண்பர்களுக்கும், என் கதையை படித்து பின்னூட்டம் அளித்த முகமறியா பதிவர்களுக்கும் முக்கியமாக ரவிஷங்கர் & தம்பி அவர்களுக்கும், தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கும், 'உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பில் அங்கம் வகிக்கும் அத்தனை பேருக்கும் என் உள்ளம் உருகும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். என் மற்ற படைப்புகள் ' அவனி அரவிந்தன் ' என்ற பெயரில் வேறு ஊடங்களில் வெளிவந்துள்ளதால், இந்த கதையை புத்தகத்தில் வெளியிடும் பட்சத்தில் ' அவனி அரவிந்தன் ' என்ற பெயரில் வெளியிடுமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். வெற்றி பெற்ற அனைத்து கதைகளும் அருமை, அனைவருக்கும் என மனமார்ந்த வாழ்த்துக்கள்..!
என்னுடைய வலைப்பூக்களின் முகவரி இதோ,

www.arvinstar.blogspot.com

www.vennilapakkangal.blogspot.com

கிருத்திகா said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. மெதுவாக கதைகளைப்படித்து விட்டு வருகிறேன்...

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இதர 230 பெரும் அந்த கதைகளை உங்கள் வலைப்பூவில்
மீள்பதிவாக வெளியிடுங்கள்.
புதிய வலைபூ தொடங்கியவர் படித்து பயனுற வசதியாயிருக்கும்.

250 கதைகளை நடுவர்கள் இருவர் படிப்பது மிகவும் கடினமான பணியே.

நிறைய விவாதங்களும் செய்திருக்கவேண்டும்.நடுவர் நேர்மையை
சந்தேகிக்க வேண்டாம்.
அவர்கள் முன்பே மறைந்த எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் படைப்புகளை
எல்லோருக்கும் கொண்டு சேர்க்க பாடுபட்டார்கள்.

வெற்றி.பெற்ற கதைகளை கண்டிப்பாக எல்லோரும் படிப்பார்கள்.
அதில் சந்தேகம் வேண்டாம்.

இன்னும் நிறைய போட்டிகள் வருகின்றன.
கடல் போன்ற வலையுலகமும் , படிக்க மக்களை தேடிக் கொண்டு வரும்
நிறைய திரட்டிகளும் உள்ளன.ஆகவே 230 பேர்களும் மீண்டும் வெளியிடுங்கள்
இதை நடத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இதில் தயவுசெய்து யாரையும் சொற்களால் காயப்படுத்தவேண்டாம்.

அப்புறம் எதிர்காலத்தில் இதுபோன்ற வாய்ப்புகள் புதியவர்களுக்கு கிட்டாமல் போகலாம்.

jerry eshananda. said...

உரையாடல் அமைப்பிற்கு வணக்கமும் வாழ்த்துக்களும்.
தமிழ் வலை பதிவர்களின் ஒற்றுமையும், திறமையும், பெருமதிப்பும்,பெரு மகிழ்சியும் கொள்ளவைக்கிறது. இந்த குடும்பத்தில் நானும் ஒரு உறுப்பினர் என்பதில் மனதிற்கு நிறைவை தருகிறது. நன்றி.
"ஜெரி ஈசானந்தா"-மதுரை

ஆசிப் மீரான் said...

நடுவர்களுக்கு வாழ்த்துகள்!!
230 கவிதைகளை வாசிக்க நேர்ந்தாலே கழிச்சலில் போய் விடும் நிலை இருக்கும்போது 230 கதைகளை வாசிப்பதென்பதும் அவைகளைத்தேர்வு செய்வதென்பதும்... வாழ்த்துகள்!!

அந்தக் கதையை எதிர்பார்த்தேன் இந்தக் கதையை எதிர்பார்த்தேன் என்பதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளவே வேண்டாம்

நான் கூடத்தான் என் கதை வருமென்று எதிர்பார்த்தேன் - எழுதாமலேயே :-) இதையெல்லாம் ஜூட்ல விடுங்க

வெற்றி பெற்ற பதிவர்கள் அனைவருகும் வாழ்த்துகள்!! புதிய பதிவர்களை ஊக்குவிக்கவில்லை என்று புலம்புபவர்களுக்கு... வெற்றி பெற்ற எல்லாருமே முதல் போட்டியிலேயே பரிசை வென்றவர்களாக இருந்திருக்க மாட்டார்கள். பல போட்டிகளில் முய்ற்சி குறையாமல் கலந்து கொண்டு வென்றவர்களாகத்தான் இருப்பார்கள். எனவே தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்

மீண்டும் உங்களிருவருக்கும் என் வாழ்த்துகள்!!

புருனோ Bruno said...

// இது வரவேற்க்கப்பட வேண்டிய விஷயம். சரியான வாசிப்பும், தொடர் எழுத்துப் பயிற்சியும் அவர்கள் மேற்கொண்டால், இனி வரும் காலங்களில் நல்ல சிறுகதை எழுத்தாளர்களாக மிளிர்வார்கள் என்பதற்கு அவர்கள் எழுதியுள்ள சிறுகதைகளே சாட்சி//

அறிவுரைக்கு நன்றி சார் :) :)

புருனோ Bruno said...

வெற்றிப்பெற்றவர்களுக்கும், மீதி 17 பேருக்கும் வாழ்த்துக்கள்

புருனோ Bruno said...

//பைத்தியக்காரான், மீதி இருக்கும் 17 கதைகளையும் சொல்லலாம் எனப் பலர் சொல்கிறார்கள் - செய்யலாமா என்பதைச் சொல்லவும். //

சொல்லலாம்

//இன்னுமொன்று - சாதாரணமாக யாரும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான விளக்கங்களைச் சொல்வதில்லையென்றாலும், நாம் இயங்குவது வலையில் என்பதால் சொல்லலாம் என்று தோன்றுகிறது. //

சொல்லலாம்

//இது குறித்து பைத்தியக்காரன் மட்டுமல்ல - மற்றவர்களும் தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.//
சொல்லிட்டேன் !!

வருண் said...

***அது சரி said...
அதிஷாவின் கதை மிக நிச்சயம் தேர்வாகும் என்று எதிர்பார்த்தேன்...இல்லாதது ஆச்சரியமளிக்கிறது...***

Is this necessary?! Everybody must have antcipated some stories to be selected. THERE is ABSOLUTELYT NO NEED to mention them UNLESS one wants to instigate some trouble!

It does not matter what you and I anticipated. Does it? Is that too hard to understand ?!!

It is instigating when one comes up and specifies one specific story and questioning the judges as if they have not done a fair job.

If that particular story is great, it will be appreciated some other judges and audience elsewhere. The story never dies after all!

வருண் said...
This post has been removed by the author.
வருண் said...

வருண் said...
I humbly request not to mention the other 17 authors' names or story titles!

You supposed to select 20 stories and you did. The story ends right here!

After all,

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை

வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.

According to these judges these twenty are the best. There is no need to mention one who just lost or whatsoever!

That is just my humble opinion! Thanks :-)

வினோத்குமார் said...

congrats for all the winner

வடகரை வேலன் said...

தமிழன் கறுப்பி - காண்டீபராஜ் தனது பரிசுப்பணத்தை ஏழை மாணவர்களுக்கு புத்தகமாக வழங்கச் சொல்லியிருக்கிறார்.அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

எவனோ ஒருவன் said...

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

போட்டி அமைப்பாளர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
---
போட்டி முடிவுகளைப் பற்றி மற்றவர்கள் விமர்சனம் செய்வது நல்லதாகப்படவில்லை.

தமிழ்ப்பறவை said...

உரையாடல் போட்டி நடத்தியவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்...
வெற்றி பெற்றவர்களுக்கும்,பெறப் போகிறவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
பலரை எழுதத்தூண்டிய அருமையான முயற்சி...
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான விமர்சன மனநிலை இருக்கும்.அவ்வகையில் பைத்தியக்காரன்,சுந்தர்ஜியின் மனநிலையில் தேர்வுகள் அமைந்திருக்கிறது.அதை மதிக்க வேண்டும்.
20 கதைகள் தேர்வின் ரகசியத்தை விளக்கவேண்டும் என விண்ணப்பிக்கிறேன். இல்லையெனில் வர்த்தக பத்திரிக்கைகளுக்கும், நட்பான வலையுலகத்திற்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.
அதுதான் மற்ற போட்டியாளர்களுக்கு நல்ல டிப்ஸாக அமையும்.அடுத்துக் கதை எழுதுகையில் திருத்திக்கொள்ள வசதியாக இருக்கும்...
இறுதிச்சுற்று வரை வந்து தேர்வு பெறாமல் போன 17ஐப் பற்றிய உங்கள் பார்வையையும் பொதுப்படையாக்கினால் நலம்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

Pot"tea" kadai said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
பலரும் நோவாமல் நொங்கு துன்ன ஆசப்படறது தெரிகிறது. ஆனால் "உரையாடல்" அமைப்பின் இம்முயற்சி மிகச்சிறந்த முன்னுதாரனமாக இருக்கும் என எண்ணுகிறேன். மிகவிரைவில் வாராந்தரி, தினசரிகளும் இம்மாதிரியானவொரு வாய்ப்பை அளித்து பதிவர்களையும் ஒரு எழுத்தாளனாக்க வாய்ப்பளிப்பார்கள் என் நினைக்கிறேன்.

மற்றபடி பலருக்கும் தங்கள் கதை தேர்வாகாதது பற்றிய ஏமாற்றம் இருக்கும் அவர்களனைவரும் ஏன் ஏன் என விளக்கம் கேட்க ஆசைப்படலாம். அதில் நியாயம் இல்லை என சொல்ல முடியாது ஆனால் இருநூத்தி சொச்ச கதைகளும் விளக்கமளித்துக் கொண்டிருக்க முடியாது. அதனால் பைத்தியும்(மன்னிக்கவும் :))), சுந்தரும் அவர்களது தேர்வுக்கான அளவுகோலைமட்டும் விளக்கினால் பலரும் விளங்கிக்கொள்வார்கள் என நினைக்கிறேன்.

அருமையான முயற்சி, அருமையான பங்களிப்பு, அபரிதமான உழைப்பு. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

என்னுடைய கருத்துபடி இங்கு பின்னூட்டப்பெட்டியை திறந்து வைத்திருப்பதே மிகப்பெரிய குற்றமாக கருதுகிறேன் ;)

Sridhar Narayanan said...

//தமிழன் கறுப்பி - காண்டீபராஜ் தனது பரிசுப்பணத்தை ஏழை மாணவர்களுக்கு புத்தகமாக வழங்கச் சொல்லியிருக்கிறார்.//

இது நல்லதொரு வழியாகத் தெரிகிறது. அந்தப் பட்டியலில் எனது பெயரையும் சேர்த்துக் கொள்ள வேண்டுகிறேன். தனி மெயிலிலும் அமைப்பினருக்கு இதே கோரிக்கையை தெரிவிக்கிறேன். :)

சென்ஷி said...

காதல் கறுப்பி & ஸ்ரீதர் நாராயணன்.

சிறப்பானதொரு துவக்கம். இருவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்!

பேருந்துக் காதலன் said...

வெற்றி பெற்ற,
கலந்து கொண்ட
மற்றும்
முன்னின்று நடத்திய அனைவருக்கும் வாழ்த்துகள்..!

damildumil said...

//யுவகிருஷ்ணா said...
இந்தப் பின்னூட்டம் கேணைத்தனமானதும், இங்கு பின்னூட்டங்களில் வாழ்த்துகளை தெரிவித்தவர்களையும் கொச்சைப்படுத்துவதாகவும் உள்ளது.

பரிசு வாங்கிவிட்டதால் மட்டுமே உங்கள் கதையை எல்லோரும் படித்து தொலைக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. யாரும் யாரையும் எதற்காகவும் கட்டாயப்படுத்த முடியாது
//

அதான, லக்கிலுக் பேருல எழுதீட்டு இருக்கும் போது குருட்டாம் போக்குல பத்திரிக்கையில ஒரு ஓரமா கொஞ்சம் இடம் கிடைச்ச உடனே, இதுக்கு காரணம், "யுவகிருஷ்ணா" பேருதான்னு நினனச்சு எழுதும் பகுத்தறிவு சிங்கமே, இந்த திரட்சைகள் எல்லாம் புளிக்க தான் செய்யும்.

வேனும்னா சொல்லுங்க, எல்லாரும் கொஞ்சம் சில்லரைகளை சேர்த்து உங்களுக்கு ஒரு ஆறுதல் பரிசு கொடுத்திடுறோம். சந்தோஷமா வாங்கிட்டு போங்க. அதுக்காக ஜெயிச்சவங்களை திட்டாதீங்க.

damildumil said...

//அதிஷா said...
அடப்போங்கையா நீங்களும் உங்க போட்டியும்!
//

இதை போட்டிக்கு கதையை அனுப்புவதற்கு முன்னாடி சொல்லியிருக்கனும்

damildumil said...

//Rangan said...
ரெண்டு மூணு கதை தவிர மத்ததெல்லாம், படிக்கறதுக்கு முன்னாலே தூக்கம் வருது! எப்படீங்க படிச்சு, கிழிச்சு, சீ... தேர்ந்தெடுத்தீங்க?
//

அதுக்காக, "அவள் நீல நிற நைட்டியை அணிந்து தேவதை மாதிரி இருந்தால்ன்ற" ரேஞ்சுக்கு எழுதின கதைக்கு தான் பரிசு கொடுக்கனும்ன்னு சொல்றீங்களா

வெ.இராதாகிருஷ்ணன் said...

போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், போட்டியினைச் சிறப்பாக நடத்தி, சிறந்ததொரு முடிவுகளை வெளியிட்டு இருக்கும் சிவராமன் மற்றும் சுந்தர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எப்படியாவது வெற்றி பெற வேண்டும் எனும் முனைப்பு இல்லாத ஒரு எழுத்துதான் எனது எழுத்து. அதன் பலனைத்தான் இப்போதுப் பார்கிறேன். ஒருவேளை எனது சிறுகதையை நீங்கள் தேர்ந்தெடுத்து இருந்தால் உங்கள் தேர்வினை விமர்சிப்பவனாக இருந்திருப்பேன்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளில் சில கதைகளைப் படித்தவன் என்கிற முறையில் நல்ல சிறுகதைகளையேத் தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள்.

தேர்ந்தெடுக்கப்படாத சிறுகதைகள் சில படித்தவன் என்கிற முறையில் அவர்கள் வெற்றி பெற மீண்டும் திறம்பட எழுதுவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

பின்னூட்டங்கள் அனைத்தும் வாசித்தபின்னர் எனக்குள் எழுந்த எண்ணம் என்னவெனில் மனதில் தோன்றியதை எழுதும் இவர்களின் மனநிலை புரிய முடிந்தாலும் காலம் காலமாக நடந்துவரும் 'சந்தேகப் பார்வைகள்' மேலும் 'நம்மைப் போல் இவர்கள் ஏனில்லை' என்கிற கண்ணோட்டமும் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஏனெனில் 'என்னைப் போல் இவர்கள் ஏனில்லை' என்கிற எண்ணம் எனக்குள்ளும் எழத்தானேச் செய்கிறது.

250 சிறுகதைகளை வாசிக்கும்போது கடைசியில் 'அடடா, அடச் சீ, ஆஹா, பிரமாதம், இப்படியெல்லாமா எழுதுவாங்க' என ஒரு வார்த்தை சிந்தனையாவது உங்களில் எழாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி எழுந்த எண்ணத்தை நீங்கள் ஒருவேளை பதிவு செய்திருக்கலாம், அல்லது எதற்கு என பேசாமல் விட்டிருக்கலாம். விமர்சனம் என ஏதாவது எழுதி இருப்பீர்களேயானால் எனது கதையில் ஒரு பின்னூட்டமாக எழுதிவிடுங்கள்.

இதையெல்லாம் 'பொதுவாத்தான் சொல்றேன்'. மிக்க நன்றி. வணக்கம்.

damildumil said...

//அபி அப்பா said...
அந்த மீதி 17 கதையையும் சொல்லிவிட்டால் இன்னும் 17 பேர் சந்தோஷப்படுவ்வாங்க தானே! இதை ஏன் பரிசீஇலிக்க கூடாது??
//

ஒரு வேளை அந்த listலையும் நீங்கள் எதிர்பார்க்கும் பதிவர்கள் பெயர் இல்லையென்றால், நர்சிம் சொன்னது மாதிரி, இன்னும் அசிங்கமாயிடும்

damildumil said...

// வெட்டிப்பயல் said...
புபுட்டியனுடைய இந்த கருத்து தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளது என நினைக்கிறேன்
//

வேண்டுமென்றே

தொடர்பவன் said...

கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுக்கள்..நன்றி

வால்பையன் said...

பரிசு பெற்ற அனைவரும் பார்டிக்கான செலவை எனது முகவரிக்கு அனுப்பவும்!

Joe said...

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!

இரா. வசந்த குமார். said...

250 கதைகளுக்கும் வாழ்த்துக்கள்.

ILA said...

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். பங்குபெற்றவர்களுக்கு கைகுலுக்கல்கள்,
சுந்தர் மற்றும் பைத்தியக்கார(ர்)க்கு சபாசு

Suresh said...

அனைவருக்கும் வாழ்த்துகள்!

Suresh said...

En kathaiyai ellarum padichittu nalla irukum sonna pothu eppadi than eluthanum eppadi than timetable pottu template la kathi elatha sonnavar ஜ்யோவ்ராம் சுந்தர் commentla avaru oruthar than eppadi solli irukaru...

Avar poi athae kathaiya judge pana sonna eppadi irukum ;) appadi than irum oru etharthamana judge a vachi select pani irukalam enpathu unmai..

karanam avaru pala book padichi eppadi than irukanum kathai ithu nigalvu endru ellam sollama manathai thottal pothum :-)

sari vidunga boss :-) ithu ellam sagama valthukal ...

This contest made me write a short story thanks :-)

Selection judge avarukku pudicha mathiri than kathai eduparu, that too i am sure reading 250 stories in same mind is not at all possible

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

சுரேஷ், நான் எப்போது உங்கள் போட்டிக் கதையில் இப்படித்தான் எழுத வேண்டும் என்று பின்னூட்டம் போட்டேன்?

ஷாகுல் said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

ரத்னாபீட்டர்ஸ் [rathnapeters] said...
This post has been removed by the author.
ரத்னாபீட்டர்ஸ் [rathnapeters] said...

RV என்கிற கூட்டாஞசோறுவுக்கு....

[தயவு செய்து பைத்தியக்காரன் என்னை மன்னிக்கவேண்டும் இந்த பின்னூட்டத்தை உங்களது வலைப்பதிவில் இடுவதற்காக].

நீங்கள் எழுதிய கதை பரிசு பெற்று விட்டது என்பதை பற்றி நீங்கள் சந்தோஷப்படுவது நியாயம் தான், ஆனால் உங்கள் கதையை நான் படித்து இதில்என்ன பரிசு பெரும்படியான அளவிற்கு இருக்குன்னு தோன்றியதும் உண்மை.

அவரவர் பார்வைக்கும் கருத்துக்கும் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமாகஇருக்கிறது, உமஷக்த்தியின் கதையும் பரிசு பெற்ற கதைகளில் ஒன்று அவரது கதையின் கரு என்னவோ சாதாரணமாகத் தெரிகிறது ஆனால் அவரது வருணனை கதையை கவிதைப்போல எழுதி இருக்கிறார்.

இதில் நடுவர்களின் பார்வையில் கதைகள் எப்படி இருந்ததோஅதற்கேற்றார்போல முடிவுகள் வெளிவந்திருக்கின்றன என்பது தான் இதிலிருந்து தெரியவருகிறது.

இடக்குப்பேசுவதை நீங்கள் பின்னூட்டத்தில் வைத்துக்கொள்ளவேண்டாம், 'கன்னி முயற்சி' என்று நான் குறிப்பிட்டுள்ளதை, கன்னி முயற்சியோ காளை முயற்சியோ என்று கூறி கிண்டல் செய்வது உங்கள் தரத்தை நன்கு எடுத்துக்காட்டுகிறது.

பட்டு புடவை வாங்குவதற்கு தேர்வு செய்வதும் ஒரு கதையை பரிசுக்கு தேர்வு செய்வதும் ஒன்றல்ல என்பதை உங்களுக்கு சொல்லி காண்பிக்க வேண்டி இருக்கிறது. பட்டுப்புடவைகளை நெயதவர்களின் பெயர்கள் எழுத்தாளர் சுஜாதா, எழுத்தாளர் சிவசங்கரி என்பதைப்போல பெயர்கள் வெளியில் பிரபலம் அடைவதில்லை. இதிலிருந்தே தெரிகிறது உங்களது அனுபவமும் முதிர்ச்சியும்.

nila said...

அம்மாவுக்கு புரியாது

சத்தியமா நேக்கும் புரியல என்ன கதை இது.
என்ன இருக்கு இதுல பரிசு குடுக்க
அய்யா சாமி என்ன குலுக்கல் முறையில் தேர்ந்து ஏடுத்திங்களா ?

எங்க சொல்லுங்க சத்தியமா படிச்சிங்களா ....இத விட நல்ல கதைகள் நான் படிச்சேன்

annaiyinarul said...

அன்பர்களே ஹாஸ்ய கதை அநேகமாக வந்திருக்காது என்று
பசுபதியே நீயே கதி என்று எழுதி அதிலுள்ள ஹாஸ்யத்தை எல்லோரும் ரசிக்க வேண்டும் என்று எண்ணினேன் ஆனால் முடிவு வேறு விதமாகி விட்டது பரிசு பெற்றவர்களுக்கு என் மனமார்ந்த
வாழ்த்துகள் அன்புடன் விசாலம்

சுரேகா.. said...

அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்!

போட்டியை நடத்திய நண்பர்களுக்கும் உளமார்ந்த நன்றிகள்!

சுரேகா.. said...

அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்!

போட்டியை நடத்திய நண்பர்களுக்கும் உளமார்ந்த நன்றிகள்!

koottanchoru said...

ரத்னா,

உங்கள் பதிவில் இட்ட பின்னூட்டத்திற்கு இங்கே எதற்கு பின்னூட்டம் இடுகிறீர்கள் என்று புரியவில்லை. சரி நானும் இங்கேயே பதில் எழுதுகிறேன்.

நான் எழுதிய கதை உங்களுக்கு பிடிக்க வேண்டும் என்று எந்த நிர்பந்தமும் இல்லை. // உங்கள் கதையை நான் படித்து இதில்என்ன பரிசு பெரும்படியான அளவிற்கு இருக்குன்னு தோன்றியதும் உண்மை. // இது உங்கள் உரிமை, ரசனை, இதில் நான் என்ன சொல்ல முடியும்? படித்ததற்கு நன்றி, அவ்வளவுதான். என்றாவது உங்களுக்கும் பிடிக்கிற மாதிரி கதை எழுதினால் சந்தோஷப்படுவேன். (நிலா, உங்களுக்கும் இதேதான். படித்ததற்கு நன்றி!)

உங்கள் பதிவில் எழுதிய பின்னூட்டத்தில் எழுதியதையே மீண்டும் திருப்பி சொல்கிறேன். பரிசு கிடைத்துவிட்டதால் எனக்கு இரண்டு கொம்பு முளைத்துவிடவில்லை. நான் எழுதிய கதையை விட யாக்கை எனக்கு பிடித்திருந்தது. ஆனால் யாக்கைக்கு பரிசு கிடைக்கவில்லை. இது என் ரசனை, தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் நடுவர்களின் ரசனை அவ்வளவுதான். நீங்களும் அதையேதான் சொல்கிறீர்கள் - // நடுவர்களின் பார்வையில் கதைகள் எப்படி இருந்ததோஅதற்கேற்றார்போல முடிவுகள் வெளிவந்திருக்கின்றன என்பது தான் இதிலிருந்து தெரியவருகிறது // அப்படித்தான் வரும், நீங்கள் வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

காளை முயற்சி. பட்டுப்புடவை பற்றி எழுதி இருந்தீர்கள். வீணாக வாதம் புரிய இஷ்டம் இல்லை. அதனால் மேலும் விளக்கப்போவதில்லை. உங்கள் மனதை புண்படுத்தும் நோக்கம் எதுவும் இல்லை. சாதாரண கேலியை sportive ஆக எடுத்துக் கொள்ளுங்கள்! - முடிந்தால்.

ஆனால் என் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. கதைதான் முக்கியம், எழுத்தாளர் அல்ல. எழுத்தாளர் முதல் முறை எழுதுகிறாரா, குடிப்பாரா, ஜெயிலுக்கு போனவரா இதெல்லாம் படிப்பவனுக்கு அனாவசியம். மேலும் இது "கன்னி முயற்சி" எழுத்தாளர்களுக்கான போட்டி என்று அறிவிக்கப்படவும் இல்லை. அப்படி அறிவிக்கபடாதபோது உங்கள் எதிர்பார்ப்புதான் தவறானது. சரி அப்படியே வைத்துக்கொண்டாலும் எனக்கும் இது "கன்னி முயற்சி"தான். "கன்னி முயற்சி"க்கு பரிசு கிடைக்காமல் போய்விடவில்லையே! இது நடுவர்களின் ரசனை, அவ்வளவுதான். இதற்காக மனம் சோராமல் மேலும் எழுதுங்கள்! முடிந்தால் உங்கள் கதையை படித்து நானும் கருத்து சொல்கிறேன். (உங்கள் கதை எனக்கு பிடிக்க வேண்டும் என்றும் எந்த நிர்ப்பந்தமும் இல்லை. பிடிக்கலாம், பிடிக்காமலும் போகலாம்.)

nila said...

/எங்க சொல்லுங்க சத்தியமா படிச்சிங்களா ....இத விட நல்ல கதைகள் நான் படிச்சேன்/

நான் மிகவும் எதிர் பார்த்த இரண்டு கதைகள்

அதிஷாவின்: யாக்கை!
சக்கரையின்: காதலுக்கு கண்ணில்லை!

இருவரும் 250 கதைகள் படித்தீர்களா இல்லை அவர் அவருக்கு பிரித்து படித்துவிட்டு பிடித்தை மட்டும் அடுத்தவரிடம் கொடுத்து படிக்க சொன்னீர்களா

பைத்திகாரனின் இந்த முயற்சி மிக சிறந்தவை அதில் சந்தேகம் இல்லை என்ன அவர் சொன்ன மாதிரி பதிவுல்கம் சார்ந்து இல்லாத சில நடுவர்களை வைத்து அவர்கள் இந்த வெற்றியை அறிவித்து இருக்கலாம் பொறுமையா இருந்தாயிற்று அகஸ்ட் என்ன மெதுவாய் டிசம்பரில் கூட வெளியிட்டு இருக்கலாம்

ஒரு ஒருவரும் தனி தனி விருப்பு வெறுப்புகள் இருக்கலாம், எனக்கு பிடித்த கதை உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் சில நல்ல கதைகளை நீங்கள் விட்டு இருப்பது எல்லாரும் நல்லதாய் பட்டது உங்களுக்கு புஸ் என்று தெரிந்து இருக்கிறாது...

பொதுவாய் எல்லாரையும் திருப்த்தி படுத்த முடியாது உண்மை..

ஆனால் கடைசி நேரம் நேரமிண்மையால் தள்ளிப்போட்டாச்சு ஏற்கனவே இனி தாமதிக்க முடியாது ...

மேலோட்டமாய் படிச்சிட்டு சிக்கிரமா படிச்சும் படிககாம தெரிவித்தாயிற்று ரிசலட்டை உங்க மனசாட்சிக்கு உண்மை தெரியும் :-)

எங்கே அந்த 250 கதைகளில் நான் உங்களுக்கு போன் போட்டு ஒரு கதையின் சிறு பகுதியை சொன்னால் உங்களால் அந்த கதையின் முடிவை சொல்ல முடியுமா !

மனசாட்சிக்கு தெரியும்

எங்கே மீதி 17 கதைகளை சொல்லுங்க
அதிலாவது தேடி பார்ப்போம்..

இந்த இருபது கதைகளில் 5 நான் எதிர்பார்த்தவை.. மீதி கதைகளை படித்தேன் அதில் 3-4 தகுதி இருக்கு ஆனா பத்துக்கு மேல் கதை நல்லா இருந்தாலும் இதை விட நல்ல கதைகளை பரிசு சென்று அடையாமல் இருப்பது வருத்தமே

காசை விட ஒரு எழுத்தாளருக்கு பாராட்டு தான் முக்கியம்...

koottanchoru said...

நிலா,

// மேலோட்டமாய் படிச்சிட்டு சிக்கிரமா படிச்சும் படிககாம தெரிவித்தாயிற்று ரிசலட்டை உங்க மனசாட்சிக்கு உண்மை தெரியும் //
இது மகா மட்டமான குற்றச்சாட்டு. இரண்டு பேர் வேலை மெனக்கெட்டு போட்டி வைத்து, கைக்காசை பரிசாக கொடுத்து, 250 கதைகளை படித்து கதைகளை தேர்ந்தெடுத்தால், உங்கள் ரசனை வேறாக இருப்பதால் அவர்கள் படிக்காமலே ஏமாற்றிவிட்டார்கள் என்று குற்றம் சாட்டுகிறீர்கள். Very distasteful. இத்தனைக்கும் யாக்கை தேர்ந்தேடுக்கப்படாதற்கு விளக்கம் வேறு கொடுத்திருந்தார்கள். நல்ல காரியம் செய்பவர்களை புகழ வேண்டாம், இந்த மாதிரி கேவலப்படுத்தாமலாவது இருங்கள்!

Suresh said...

@ Sundar

Sorry Nanba nan ravishanakarnum neengalum ondru endru nenaithu vittan manithu vidungal

Comment pottathu ravishankar athuvum nan kettathukku than pottaru..

Neenga nalla kavithai thokku pani irukinga nu joe solli unglaa pathi kelvi patu irukaen.. manikkavum en thavarukku

நந்தா said...

நிலா கலக்கிட்டீங்க. எப்படி இவங்க மனசாட்சிக்குள்ள போய் எட்டிப்பார்த்துட்டு வந்த மாதிரியு, எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரியும் கமெண்டு போடறதுன்னு எங்களுக்கும் கொஞ்சம் கத்துக் கொடுங்களேன்.

சோ நீங்க எதிர்பார்த்த கதைகள் வர வில்லை. அதனால நிக்க வெச்சு கேள்வி கேக்கறீங்க. இதுக்கு இவங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருக்காங்க. நாம இப்படி உக்காந்த இடத்துல இருந்துக்கிட்டு வெறுமனே கேள்வி கேக்கறோமேங்கிற குற்ற உணர்ச்சி எதுவும் கொஞ்சம் கூட ஏற்படலை.

இதை விடுங்க எத்தனை போட்டிகளில இப்படி இவ்வளவு டிரான்ஸ்பரண்டா இத்தனை கதை, அது இங்க இங்க இருக்கு. நாங்கதான் நடுவர்கள். இதோ இதை செலக்ட் பண்ணி இருக்கோம்னு சொல்லுவாங்க. பல இதுல ஜெயித்த கதைகளைத் தவிர மத்ததை எல்லாம் கண்ணுலயே காட்ட மாட்டானுங்க.

சில சமயம் உங்களை மாதிரி ஆட்களை எல்லாம், ச்சீ போன்னு கேவலமா ஒரு பார்வை பார்த்துட்டு மட்டும் கடந்துடணும்னு நினைப்பதுண்டு. அப்படியும் உங்களோட அறிவுஜீவித் தனத்தை காமிச்சு திட்டியவது பதிலளிக்க வெச்சுடறீங்க.

http://blog.nandhaonline.com

«Oldest ‹Older   1 – 200 of 205   Newer› Newest»